வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'தெறி' திரைப்படம் - எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மீண்டும் பட மாளிகையில் வெளியாகிறது என படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களை படமாளிகைக்கு வரவழைக்கும் வகையில் கடந்த தசாப்தங்களில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களை திரையுலக வணிகர்கள் மீண்டும் பட மாளிகையில் வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு ரசிகர்களின் ஆதரவும் கணிசமாக அதிகரித்து வருவதால் இந்த போக்கு அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் மீண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 'தெறி' திரைப்படம் - 'ஹாட் ஸ்பாட் 2 ' படக் குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க தள்ளி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் 'தெறி' திரைப்படம் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பட மாளிகையில் மீண்டும் வெளியாகிறது.
இதனிடையே விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' எனும் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை படமாளிகையில் வெளியாவதற்கான சாத்திய கூறு இல்லை என சர்வதேச அளவிலான திரை வணிகர்கள் உறுதிப்பட தெரிவித்ததால்.. விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் தொடர்ந்து மீண்டும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM