"சகோ­தர இனங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கு­மாறு இலங்கை மக்­க­ளிடம் வேண்­டு­கின்றேன்"

Published By: Digital Desk 7

02 Sep, 2017 | 11:29 AM
image

"புனித ஹஜ்ஜுப் பெரு­நாளின் உண்­மை­யான தாற்­ப­ரி­யத்­தினை உணர்ந்து ஒரு­வ­ரை­யொ­ருவர் புரிந்­து­ கொண்டு சகோ­தர இனங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கு­மாறு இலங்கை மக்­க­ளிடம் மிகவும் அன்­புடன் வேண்­டிக்­கொள்­கின்றேன். அத­னூ­டாக அர்ப்­ப­ணிப்பின் உண்மைத் தன்­மை­யினை எமது சகோ­தர மக்­க­ளிடம் கொண்டு செல்ல வாய்ப்புக் கிட்­டு­கின்­றது" என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

அவர் விடுத்­துள்ள புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்­தியில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

"புனித ஹஜ்ஜுப் பெரு­நாளைக் கொண்­டா­டு­கின்ற இலங்­கையின் அனைத்து முஸ்­லிம்­க­ளுக்கும் எனது மன­மார்ந்த வாழ்த்­துக்­களைத் தெரிவித்­துக்­கொள்ள விரும்­பு­கின்றேன். இறை­வ­னுக்­கா­கவும், தமது சகோ­த­ரர்­க­ளுக்­கா­கவும் ஒருவர் செய்யக் கூடிய தியா­கத்தின் முக்­கி­யத்­து­வத்தை புனித ஹஜ்ஜுப் பெருநாள் தின­மா­னது பிர­தி­ப­லிக்கச் செய்­கின்­றது. 

சமய நம்­பிக்­கை­யினை முதன்­மைப்­ப­டுத்தி வழி­பா­டு­களில் ஈடு­படல், வறிய மக்­க­ளுக்கு உத­வுதல், நோன்பு நோற்றல் மற்றும் தியாகம் செய்தல் போன்ற பண்­புகள் இஸ்லாம் சம­யத்தில் முக்­கிய இடம் வகிக்­கின்­றன. பல்­வேறு சமூ­கங்­களைச் சார்ந்­த­வர்கள் ஒரு­வரை ஒருவர் புரிந்­து­கொள்­வ­தற்கும் ஒற்­று­மை­யு­டனும் சமா­தா­னத்­து­டனும் வாழ்­வ­தற்கும் உத­வு­கின்ற அர்ப்­ப­ணிப்பின் முக்­கி­யத்­துவம் பற்றி இன்­றைய நாளில் கொண்­டா­டப்­ப­டு­கின்ற புனித ஹஜ்ஜுப் பெரு­நாளின் ஊடாக நினை­வூட்­டப்­ப­டு­கின்­றது.

இத்­தி­னத்­திலே, புனித ஹஜ்ஜுப் பெரு­நாளின் உண்­மை­யான தாற்­ப­ரி­யத்­தினை உணர்ந்து ஒரு­வ­ரை­யொ­ருவர் புரிந்­து­கொண்டு, மற்­றை­ய­வர்­களின் பல்­வ­கை­மைக்கு மதிப்­ப­ளிக்­கு­மாறு நான் இலங்கை மக்­க­ளிடம் மிகவும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். அதனூடாக அர்ப்பணிப்பின் உண்மைத் தன்மையினை எமது சகோதர மக்களிடம் கொண்டு செல்ல வாய்ப்புக் கிட்டுகின்றது ".

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09