இலங்கை மக்கள் தங்களின் நாட்டை பற்றி ஒரு புதிய கோணத்தில் உலகிற்கு பெருமையுடன் எடுத்துரைக்கும் வகையில் இலங்கையின் அடையளமாகத் திகழும் உணவு வகைகளையும் அதன் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையும், இன்றைய நவீன கலாச்சாரத்தை செதுக்கும் மனிதர்களையும் மையமாக வைத்து தொகுப்பாளர் டாஷா மரிக்கார் மற்றும் இயக்குநர் அப்தெல் அஸீஸின் கைவண்ணத்தில் செலிப்ரேடிங் ஸ்ரீ லங்கா எனும் 6 பாகங்களை அடக்கிய தொலைக்காட்சி தொடரொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தொகுப்பாளர் டாஷா மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
6 பாகங்களை கொண்ட இத்தொடரானது எல்லோராலும் மதிக்கப்படும் தொலைக்காட்சி தளங்களில் ஒன்றான நெஷனல் ஜோக் ரபிக் (national geographic) மூலம் ஒளிபரப்பப்பட்டு அனைவரினதும் கவனத்தையும் இலங்கை பக்கம் ஈர்க்கும் என்ற நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஒளிப்பரப்பாகும் இந்த தொலைக்காட்சி தொடர் இலங்கை உட்பட இந்தியா, பங்களாதேஷ், பூட்டான் நேபாளம் மற்றும் மாவைத்தீவு ஆகிய நாடுகளில் ஒளிபரப்பப்படும்.
இது இலங்கையின் சிறப்பை உலக நாடுகளின் சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட பார்வையாளர்கள் பிரிவொன்றின் மத்தியில் நேரடியாக எடுத்துச் செல்லும்.
இத்தொடரானது இலங்கை மக்கள் தங்களின் நாட்டை பற்றி ஒரு புதிய கோணத்தில் உலகுக்கு பெருமையுடன் எடுத்துரைக்கும் பெரும் வாழ்வியல் மாற்றமாக அமையும். அத்துடன் சுற்றுலாத்துறையின் மிக முக்கிய மைல்கல்லாகவும், முக்கியமான சந்தைகளில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
இப்படைப்பானது சர்வதேச தரம் வாய்ந்த தாயாரிப்பாகவும், இலங்கை மண்ணின் மணம் மாறாத அதன் தனித்துவக் குரலை உலகுக்கு எடுத்துரைக்கும் ஓர் உன்னத படைப்பாகவும் விளங்கும்.
மேலும், இலங்கை முழுவதும் உள்ள 4 முக்கியமான சினமன் விடுமுறை விடுதிகளை மையப்படுத்தும் இத்தொடரில் வர்த்த நாமத்தின் ஆளுமை, பன்முகத்தன்மை, விரிவான சேவை மற்றும் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள விருந்தோம்பல் பண்பு என்பனவற்றை எடுத்துக்காட்டுகிறது.
இத்தொடரினூடாக புதிய தலைமுறை சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில், சாகச சுற்றுலாத்துறையை உலகளாவீய ரீதியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இந்த செலிப்ரேடிங் ஸ்ரீ லங்கா என்ற தொலைக்காட்சி தொடரினால் இலங்கை சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சி அடையும் என்றார்.



படிப்பிடிப்பு - சுஜீவகுமார்













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM