இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

Published By: Digital Desk 1

18 Feb, 2026 | 02:09 PM
image

மட்டக்களப்பு - வாழைச்சேனை, கோரளைப்பற்று மற்றும் பொலன்னறுவை காதி நீதிமன்றங்களின் காதி நீதிபதி ஒருவர் 5,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நேற்று செவ்வாய்க்கிழமை(17) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் பற்றி தெரியவருகையில், முறைப்பாட்டாளரின் மனைவி, பிள்ளைகளுக்கான பராமரிப்பு கொடுப்பனவு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  

இதன்போது, பராமரிப்பு கொடுப்பனவைச் செலுத்தத் தவறியமைக்காக, முறைப்பாட்டாளருக்கு எதிராக நீதிவான் நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை  பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த பிடியாணையை இரத்துச் செய்வதற்காக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பராமரிப்பு வழக்கு தொடர்பான விபர அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக நீதிபதியான சந்தேகநபர் 5,000 ரூபாவை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த நபர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய, வாழைச்சேனை 05, அக்பர் பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள காதி நீதிமன்ற அலுவலகத்தில், குறித்த நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, அவரை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி...

2026-03-13 10:32:18
news-image

தெஹிவளை மற்றும் மாத்தறையில் போதைப்பொருட்களுடன் இருவர்...

2026-03-13 10:26:58
news-image

பண்டிகைக்கால இணைய மோசடிகள்: பொதுமக்களுக்கு இலங்கை...

2026-03-13 10:04:11
news-image

பஸ் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

2026-03-13 09:40:50
news-image

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக...

2026-03-13 09:46:12
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது! 

2026-03-13 09:37:36
news-image

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-03-13 09:07:46
news-image

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;...

2026-03-13 09:07:21
news-image

பொலிஸ் ஊடகப்பிரிவு பணிப்பாளர் பிரடெரிக் வூட்லருக்கு...

2026-03-13 09:06:38
news-image

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது...

2026-03-13 07:52:47
news-image

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு:...

2026-03-13 07:38:48
news-image

இன்றைய வானிலை

2026-03-13 06:08:35