அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தொலைபேசி தரவை அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 03 சந்தேக நபர்களும் இன்று புதன்கிழமை (18) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (13) அக்குரேகொட, தலங்கமவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விசாரணைகளை நடத்துவதற்காக பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் 12 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
விசாரணைகளின் போது, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் இரண்டு சகோதரர்களை மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் திங்கட்கிழமை (16) கொட்டாவையில் கைது செய்தனர்.
அவர்கள் செவ்வாய்க்கிழமை (17) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்களை இன்றையதினம் வரை விசாரணைக்காக தடுத்து வைக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது.
இதேவேளை, விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நேற்று பிற்பகல் பொல்கசோவிட்டவில் "திலா" என்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான "திலா"வின் அறிவுறுத்தலுக்கு இணங்க இரண்டு சகோதரர்கள் துப்பாக்கிகளை கொண்டு சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM