தமிழர் கலைகள் - மரபும் மாற்றமும் ஆய்வு மாநாடு - 2025

18 Feb, 2026 | 01:44 PM
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, சேர்.பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் இரண்டாவது பன்னாட்டு ஆய்வு மாநாடு கடந்த ஆண்டு 14.11.2025 அன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. 

இம்மாநாட்டின் பொதுத்தலைவராக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, தலைவராகப் பீடாதிபதி த.றொபேட் அருட்சேகரன், ஒருங்கிணைப்பாளராக கலாநிதி சீதாலக்ஷ்மி பிரபாகரன், செயலாளராக கலாநிதி  கிருபாசக்தி கருணா, பதிப்பாசிரியராக கலாநிதி அருட்செல்வி கிருபைராஜா செயற்பட்டிருந்தனர்.

"தமிழர் கலைகள் - மரபும் மாற்றமும்" எனும் கருப்பொருளில் இந்த ஆய்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்வின் முதன்மை விருந்தினராக யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ஸ்ரீமான் ஸ்ரீ சாய்முரளி கலந்து சிறப்பித்தார்.

மாநாட்டின் முதன்மைக் கருத்துரைஞராக சென்னை கலாஷேத்திராவின் ஓய்வு நிலைப் பேராசிரியர் சே.இரகுராமன் தமிழ்நாட்டில் இருந்து அழைக்கப்பட்டிருந்தார்.

ஆய்வாளர் பதிவுடன் தொடங்கிய இந்த ஆய்வு மாநாடு மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டிய அர்ப்பணம் எனும் நிகழ்வுகளைத் தொடர்ந்து வரவேற்புரை, ஆசியுரை, ஒருங்கிணைப்பாளர் உரை, மாநாட்டுத் தலைமை உரை. தலைமை உரை, பிரதம விருந்தினர் உரை, முதன்மைக் கருத்துரைஞர் அறிமுக உரை முதலான உரைகள் இடம்பெற்றதுடன் ஆய்வுத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து விருந்தினர் மதிப்பளிப்புடன் மாநாட்டுச் செயலாளரின் நன்றியுரையும் இடம்பெற்றது.

நான்கு அமர்வுகளாக இம்மாநாட்டிற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகள் பல அளிக்கை செய்யப்பட்டன. இந்த அமர்வுகளின் தலைவர்களாகப் பேராசிரியர் கி.விசாகரூபன், பேராசிரியர் க.மகேஸ்வரன், கலாநிதி ஏ.என்.கிருஸ்ணவேணி, பேராசிரியர் ந.சண்முகலிங்கன் ஆகியோர் பணியாற்றியிருந்தனர். இம்மாநாட்டில் வெளிநாட்டு உள்நாட்டு ஆய்வாளர்களின் ஆய்வு அளிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

ஆய்வு மாநாட்டுக் கலை நிகழ்வுகள் 15.11.2025 அன்று மாலை நான்கு மணியில் இருந்து இருந்து யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெற்றது.

விரலிசை அமுதம், தமிழிசை அரங்கு, கொஞ்சும் சதங்கை, மணிமேகலை எனும் தலைப்புக்களில் அமைந்த ஆற்றுகை நிகழ்வுகள் இப்பீடத்தின் இசை, வாத்திய இசை, நடன, நாடகத் துறையினரால் அளிக்கை செய்யப்பட்டன. இந்த ஆய்வு மாநாடு தொடர்பான மீளாய்வுக் கூட்டம் 22.01.2026 அன்று சேர்.பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுமாநாடும் கலை நிகழ்வுகளும் இந்திய - இலங்கை அறக்கட்டளையின் அனுசரணையில் மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கான யாழ் இந்தியத் அனைத்து நிகழ்வுகளும் துணைத்தூதரகத்தின் ஆதரவில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டாக்டர் அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையில்...

2026-03-12 18:16:04
news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10
news-image

சுனந்தாஜியின் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவின்...

2026-03-11 19:30:42
news-image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச...

2026-03-11 19:35:06
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலக்கிய களம்...

2026-03-11 11:03:56
news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09