யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்

18 Feb, 2026 | 12:25 PM
image

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியிருந்தது.

எனினும், பல்கலைக்கழக நிர்வாகம் பதில் எதையும் வழங்காத நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடி விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை எனும் பெயரில், பாலியல் அத்துமீறல்கள், துஸ்பிரயோகங்கள், சீண்டல்கள் என்பவற்றுடன் உடலியல் ரீதியான தாக்குதல்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகிடிவதைகள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகள், விடுதிகளில் தங்கியுள்ள மூத்த மாணவர்கள் , தமது இடங்களுக்கு அழைத்து பகிடிவதை புரிவதனால், பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடக்கும் செயல்களுக்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்க முடியாது எனவும், பாதிக்கப்பட்டவர்கள் வெளியே தனிப்பட்ட ரீதியில் பொலிஸ் முறைப்பாடோ அல்லது வேறு நடவடிக்கையோ எடுக்க முடியும் என பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கூறி வருவதாகவும் குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன் வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.     

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் கவீந்திரன் கோடீஸ்வரன்...

2026-11-16 16:05:55
news-image

இருதரப்பு ஒத்துழைப்பு, நீல - பசுமைப்...

2026-11-16 15:46:53
news-image

துப்பாக்கி, தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

2026-11-16 15:44:34
news-image

இலங்கை ஆட்கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த...

2026-11-16 14:54:32
news-image

இலங்கைப் பாராளுமன்ற பிரதி சபாநாயகருக்கும் கொரிய...

2026-11-16 14:55:03
news-image

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: பலாங்கொட...

2026-11-16 14:17:46
news-image

ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் மீட்பு :...

2026-11-16 13:47:28
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-11-16 13:32:58
news-image

நோர்வூட் பிரதேச சபை உப தவிசாளராக ...

2026-11-16 13:32:25
news-image

இலங்கை தொழில்நுட்ப சேவைப் பதவிகளின் கடமைகளை...

2026-11-16 13:00:49
news-image

சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் அஞ்சலி!

2026-11-16 12:56:06
news-image

இருவேறு பகுதிகளில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர்...

2026-11-16 12:16:40