கொழும்பில் பல பகுதிகளில் புதன்கிழமை (18) நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலையிலிருந்து தெகிவளை வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
அதன்படி, மொரட்டுவை, இரத்மலானை, கட்டபெத்த, சொய்சாபுரம், கல்கிஸ்ஸ, தெகிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா, கொலன்னாவை, பத்தரமுல்லை ஆகிய பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகத்தை வியாழக்கிழமை (19) அதிகாலை 6.00 மணிக்குள் மீண்டும் வழமைக்குக் கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வருந்துவதுடன், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு: 1939 என்ற அவசர இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM