பாராளுமன்ற ஓய்வூதிய நீக்கம்: யாரையும் அசௌகரியப்படுத்த அல்ல - அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

Published By: Vishnu

18 Feb, 2026 | 04:21 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற ஓய்வூதியக் கொடுப்பனவு சட்டத்தை இல்லாதொழிப்பதானது எவரையும் அசௌகரியங்களுக்கு உட்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் செயற்பாடு அல்ல என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) திருத்த சட்டம் மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு  தெரிவித்தார்.

அவர அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம் என நாம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் உள்ள  இந்த முறைமையை இல்லாதொழிப்பது அவசியமாகும்.இந்த ஓய்வூதிய சட்டம் நிறைவேற்றப்படும் போது நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுகின்றதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

நாட்டில் ஊழல்,மோசடி பாரியளவில் காணப்பட்டது. அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் அது தெளிவுபடுத்தப்படுகிறது. 

பல தசாப்தங்களாக இந்த நாட்டில் இனவாத பிரச்சினை காணப்படுகிறது. நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் அந்த கோணத்தில் பார்க்கப்பட்டு  அசௌகரியத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

நாட்டு மக்களின் நிதியை கொள்ளையடித்தவர்கள் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்களா? அல்லது அவர்கள் நல்லிணக்கத்தை சீர்குலைத்தார்களா என்பதை நாம் பார்க்க வேண்டும். 

நாட்டு மக்களின் வரிப்பணத்தில்தான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. அவர்களுக்கே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த பல தசாப்தங்களாக இதுவே இடம் பெற்றுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23
news-image

மரியா காஸ்டிலோ - அருண் ஹேமச்சந்திர...

2026-05-09 20:47:28