பாராளுமன்ற செயலாளர் நாயகத்தையும் பதவி நீக்கம் செய்ய மறைமுகமான சதித்திட்டம் - ஹர்ஷன ராஜகருணா

17 Feb, 2026 | 07:55 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற பிரதிச்  செயலாளர் நாயகத்தை பதவி  நீக்கம் செய்தது போன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்தையும் பதவி நீக்கம் செய்ய மறைமுகமான சதித்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீ்க்குதல்) சட்டமூலம்  மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்னவை நீக்கினார்கள். தற்போது செயலாளர் நாயகத்தையும் நீக்குவதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. சமிந்த குலரத்ன தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையின் இறுதி பந்தியில் பரிந்துரைகளுக்கு மேலதிகமாக, ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைக்கு முரணாக  பாராளுமன்ற பிரதிச்செயலாளர் நாயகம் சம்மிந்த குலரத்ன நியமிக்கப்பட்ட முறை மற்றும் அதன் மூலம் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியமைக்காக, பாராளுமன்ற செயலாளர் நாயகமான கே..ஏ. ராேஹனதீரவை தற்காலிகமாக அவர் தற்போது வகிக்கும் பதவியில் இருந்து நீக்கி, அவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது

அரசாங்கம் ஒரு பக்கத்தால் நீதிமன்ற நடவடிக்கையில் கைவைக்கிறது. இன்னுமொரு பக்கத்தால், கணக்காய்வாளர்நாயகம், சட்டமா அதிபரில் கை வைக்கிறது. தற்போது பாராளுமன்றத்தில் கை வைத்திருக்கிறது. பாராளுமன்ற பிரதி்ச் செயலாயரை பதவி நீக்கம் செய்துவிட்டு தற்போது பாராளுமன்ற செயலாளர் நாயகத்தையும் நீக்குவதற்கே திட்டமட்டு வருகின்றனர்.

நாட்டை பெலவத்தைக்கு தேவையான முறையில் வழிநடத்தவா முற்படுகிறீர்கள். சபாநாயகர் ஆசனத்துக்கு வருவது  பெலத்தைக்கு தேவையான முறையில் செயற்படுவதற்கா? என கேட்கிறோம். அவ்வாறு செயற்பட எந்த உரிமையும் இல்லை. அதனால்  இந்த நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்.சுயாதீன நிறுவனங்கள் மீது கைவைத்து மக்கள் விடுதலை முன்னணிக்கு தேவையான முறையில் நாட்டை வழிடத்த நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52
news-image

எரிபொருள் கியூ.ஆர் குறியீடு முறை முழுமையாக...

2026-03-15 16:04:28