டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஒருநாள் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா 4–1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் ஆட்டம் அடிலைட் டில் இன்று நடைபெறுகிறது.
ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி இருபதுக்கு 20 தொடரையாவது வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
ஒருநாள் போட்டியில் துடுப்பாட்டம் சிறப்பாக இருந்தும், பந்துவீச்சு சரியாக அமையாததால் தோல்வி ஏற்பட்டது. இதை இருபதுக்கு 20 போட்டியில் சரிசெய்ய வேண்டிய நிலை உள்ளது. இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் இருக்கும் நிலையில் இந்த தொடர் முக்கியமானதாகும்.
கடந்த 3 போட்டிகளில் நீக்கப்பட்டிருந்த அஷ்வின் இன்றைய போட்டியில் இடம் பெறுவார் என்றுதெரிகிறது. அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் நெஹ்ரா,ஹர்பஜன்சிங் ஆகியோர் இருபதுக்கு 20 அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஒருநாள் தொடரை கைப்பற்றியது போலவே இந்தத் தொடரையும் வெல்லும் ஆர்வத்தில் ஆஸி. உள்ளது.
தலைவர் ஆரோன் பிஞ்ச், வோர்னர், சுமித், மார்ஷ் சகோதரர்கள் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். மிகவும் அனுபவம் வாய்ந்த வோட்சன், டய்ட் ஆகியோரும் அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பார்கள்.
இன்றைய போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்குகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM