IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா டித்வா சூறாவளியால் மண்சரிவுக்குள்ளான பகுதிகளில் கண்காணிப்பு விஜயம்

17 Feb, 2026 | 06:17 PM
image

இலங்கைக்கு வருகை தந்துள்ள  சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா, டித்வா சூறாவளி காரணமாக மண்சரிவுக்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் மாவதுர கிராமத்திற்கு  இன்று (17) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

அனர்த்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியான மாவதுர பிரதேசத்தில், ஏராளமான வீடுகள் மண்சரிவுக்கு உள்ளாகி 28 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய ஜோர்ஜிவா, அவர்களுக்கு தனது கவலையைத் தெரிவித்தார். 

அனர்த்தத்தின்போது, அரசாங்கம் மேற்கொண்ட விரைவான  நடவடிக்கைகளையும், மக்கள் வெளிப்படுத்திய தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை உணர்வையும் அவர் மேலும் பாராட்டினார்.

இப்போது இங்கு வாழும் சிறு குழந்தைகள் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாளை பெரும் பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் இளைய தலைமுறையினரை வலுப்படுத்த  அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று தாம் நம்புவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளிடம்  கிறிஸ்டலினா ஜோர்ஜிவா குறிப்பிட்டார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய மாகாண  பிரதம செயலாளர் ஜீ.எச்.எம். பிரேமசிங்க, கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி...

2026-03-13 10:32:18
news-image

தெஹிவளை மற்றும் மாத்தறையில் போதைப்பொருட்களுடன் இருவர்...

2026-03-13 10:26:58
news-image

பண்டிகைக்கால இணைய மோசடிகள்: பொதுமக்களுக்கு இலங்கை...

2026-03-13 10:04:11
news-image

பஸ் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

2026-03-13 09:40:50
news-image

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக...

2026-03-13 09:46:12
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது! 

2026-03-13 09:37:36
news-image

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-03-13 09:07:46
news-image

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;...

2026-03-13 09:07:21
news-image

பொலிஸ் ஊடகப்பிரிவு பணிப்பாளர் பிரடெரிக் வூட்லருக்கு...

2026-03-13 09:06:38
news-image

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது...

2026-03-13 07:52:47
news-image

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு:...

2026-03-13 07:38:48
news-image

இன்றைய வானிலை

2026-03-13 06:08:35