நடிகர் ஆதி நடிக்கும் 'மரகத நாணயம் 2' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

17 Feb, 2026 | 05:44 PM
image

நடிகர் ஆதி நடிப்பில் தயாராகும் 'மரகத நாணயம் 2 ' திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நடிகர்கள் கார்த்தி - ஆர்யா, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குநர் ஏ ஆர் கே சரவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மரகத நாணயம் 2 'திரைப்படத்தில் ஆதி , பிரியா பவானி சங்கர்,  சத்யராஜ் , நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ், டேனி , அருண் ராஜா காமராஜ்,  முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பி வி ஷங்கர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைக்கிறார். ஹாரர் கொமடி திரைப்படமாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் - தங்கல் டிவி - ஆர் டி சி மீடியா - ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி - குட் ஷோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

2017 ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற 'மரகத நாணயம்' படத்தின் முதல் பாகத்தை விட.. இரண்டாம் பாகத்தில் நிறைய சுவாரசியமான திரை அனுபவம் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்