நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் 'தாஷமக்கான்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'றாப் பேட்டில்' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
இயக்குநர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தாஷமக்கான் 'எனும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் , சத்யராஜ் ,சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் வட சென்னையைச் சார்ந்த இளம் றாப் இசை கலைஞர்கள் நட்சத்திர கலைஞர்களாக பங்கு பற்றி இருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்திருக்கிறார்.
வட சென்னை சார்ந்த றாப் இசை கலைஞர்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இடா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வினித் வரபிரசாத் தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தில் இடம்பெற்ற 'என்ன மாமே இருமலா இருக்குது..' எனத் தொடங்கும் முதல் றாப் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை எம் சி ரூட் - எம் ஜே சூர்யா - ஸ்மைல் துப்பாக்கி'ஸ்- எம் சி விஜய் - சாண்டி - விஜே விஜய் மற்றும் கே டி ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள்.
மேலத்தேய நாடுகளில் பிரபலமான இந்த றாப் இசையை வடசென்னையை சார்ந்த இளைஞர்கள் சர்வதேச தரத்தில் பாடி ஆடி நடித்திருப்பது இசை ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM