தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு, 'சேயோன்' என பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக காணொளி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் வெளியாகவிருக்கும் தாய் கிழவி எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் 'சேயோன் ' எனும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார் .
அவருடன் பால சரவணன், அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
கிராமிய பின்னணியில் மக்களின் குறு தெய்வ வழிபாடு தொடர்பான படைப்பாக உருவாகும் இந்த திரைப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல்ஹாசன் மற்றும் ஆர் .மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக காணொளி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற 'அமரன்' படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் - கமல்ஹாசன் கூட்டணி அமைத்திருப்பதாலும்... இந்த கூட்டணியில் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் + இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்திருப்பதாலும்... 'சேயோன் ' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM