பிரே­சி­லுக்­கான முன்னாள் இலங்கை தூது வர் ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரிய தொடர்­பாக முறை­யான விசா­ரணை ஒன்றை ஆரம்­பித்தால்  அது­தொ­டர்­பாக சாட்­சி­யாக முன்­வந்து நீண்ட விளக்­கத்தை அளிப்பேன். அவ­ரது செயற்­பா­டு­க­ளுக்கு  அன்­றி­ருந்த பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் மற்றும் ஆட்­சி­யா­ளரின் ஆசிர்­வாதம் இருந்­த­மைக்கு என்­னிடம் தகவல் இருக்­கின்­றது என பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல் மார்ஷல் சரத்­பொன்­சேகா தெரி­வித்தார்.

கூட்­டுப்­ப­டை­களின் தலைமை அதி­காரி அட்­மிரல் ரவிந்­திர விஜே­கு­ண­வர்­தன மற்றும் புதிய கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் சின்­னையா ஆகி­யோரை நேற்று வெள்­ளிக்­கி­ழமை அவ­ரது அமைச்சில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய பின்னர் ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே   அவர் இவ்­வாறு கூறினார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

எனக்கு பின்னர்   இரா­ணுவ தள­ப­தி­யாக ஜகத் ஜய­சூ­ரிய  நிய­மிக்­கப்­ப­டுவார் என நான் எதிர்­பார்க்­க­வில்லை. அவர் அந்த பத­விக்கு பொருத்­த­மா­னவர் அல்ல. அவரை தள­ப­தி­யாக்க வேண்டாம் என மஹிந்த ராஜ­பக்ஷ்­விடம் தெரி­வித்தேன். பல சிரேஷ்ட அதி­கா­ரிகள் இருக்கும் நிலை­யி­லேயே  அவர் இரா­ணுவ தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்டார். மஹிந்த ராஜ­ப­க்ஷவும் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவும் அவர்­களின் தேவைக்கே அவரை தள­ப­தி­யாக்­கி­னார்கள். அதன் பெறு­பே­றா­கவே என்னை இழுத்­துக்­கொண்டு சிறை­யி­ல­டைக்க அவர் தலை­மைத்­துவம் வகித்தார்.

வவு­னி­யாவில் கட்­ட­ளைத்­த­ள­ப­தி­யாக ஜகத் ஜய­சூ­ரிய  செயற்­பட்டார். ஆனால் அவர் யுத்த களத்தில் ஈடு­ப­ட­வில்லை. இரா­ணு­வத்­துக்கு தேவை­யான வச­தி­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுப்­பதே அவரின்   பொறுப்­பாக இருந்­தது. அந்த காலப்­ப­கு­தியில் அவர் சில குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டு­வ­தாக எனக்கு தகவல் கிடைத்­தது. அதா­வது, யுத்­தத்­தின்­போது கைது­செய்­யப்­ப­டுட்டு அவ­ருக்கு கீழ் இருப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக  குற்றம் செய்­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது . 

அத்­துடன் அவர் இரா­ணுவ தள­ப­தி­யான பின்­னரும்  அந்த குற்­றச்­செ­யற்­பாட்டை தொடர்ந்து மேற்­கொண்டார் என்றே நான் நினைக்­கின்றேன். அவ­ரது குற்­றங்கள் தொடர்­பாக என்­னிடம் தக­வல்கள் இருக்­கின்­றன. முறை­யான விசா­ரணை ஒன்றை ஆரம்­பித்தால் அப்­போது அது­தொ­டர்­பாக சாட்­சி­யாக முன்­வந்து நீண்ட விளக்­கத்தை அளிப்பேன்.

அதனால் ஜகத் ஜய­சூ­ரிய என்­னி­ட­மி­ருந்து இவ்­வா­றான பதிலை  எதிர்­பார்த்­தி­ருக்­க­மாட்டார். அவர் குற்றம் செய்­தி­ருந்­த­மையை நான் அறிந்­தி­ருந்தேன். இது தொடர்­பாக விசா­ரணை ஒன்றை நடத்த ஆரம்­பித்தேன். அதன் முதற் கட்­ட­மாக  அவ­ரது பிர­தான உத­வி­யா­ள­ராக இருந்த லெப்­டினன் ஒரு­வரை கைது­செய்தேன். அந்த விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­கும்­போது என்னை இரா­ணுவ தள­ப­தியில் இருந்து நீக்­கி­னார்கள்.

எனவே ஜகத் ஜய­சூ­ரி­யவின் குற்­றங்­க­ளுக்கு அன்றிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஆட்சியாளரின் ஆசிர்வாதம் கிடைத்தமைக்கு என்னிடம் தகவல் இருக்கின்றது. அதனால் குற்றமிழைத்த இராணுவ வீரர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதன் மூலம் 2இலட்சம் இராணுவ வீரர்களின் நற்பெயரை பாதுகாத்துக்கொள்ளலாம் என்றார்.