நடிகர்கள் விமல் - நட்டி இணைந்து இருக்கும் 'வடம் ' படத்தின் அப்டேட்ஸ்

17 Feb, 2026 | 05:33 PM
image

தமிழில் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு வணிக ரீதியான நம்பிக்கையை தொடர்ந்து அளித்து வரும் நடிகர்களான விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'வடம்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'பாண்டி முனி' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் வி. கேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடம்' எனும் திரைப்படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, பால சரவணன், 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி . இமான் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தில் இடம்பெற்ற 'வர்றான் வர்றான் பாண்டி முனி வர்றான்..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை பாடலாசிரியர் ஞானக்கரவேல் எழுத பின்னணி பாடகர் அந்தோணி தாசன் பாடியிருக்கிறார். ஜல்லிக்கட்டு காளையை பற்றிய பாடலாகவும், கிராமிய இசையுடன் ஒலிப்பதாலும் இந்தப் பாடலுக்கு இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் விமல் - ஸ்ரேயா சரண்...

2026-09-15 15:08:53
news-image

நடிகை அஞ்சலி நாயரின் நடனத்தில் வெளியான...

2026-09-15 15:08:29
news-image

நடிகர் 'சியான்' விக்ரம் நடிக்கும் :'பவர்...

2026-09-15 14:59:36
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'தி கிராண்ட்...

2026-09-15 14:58:32
news-image

நடிகை கோமலீ பிரசாத் நடிக்கும் 'மண்ட...

2026-09-15 14:46:21
news-image

ராஷ்மிகா மந்தானா நடிப்பில் திரைப்படமாகும் 'பாரத...

2026-09-15 14:46:05
news-image

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தனி முத்திரை...

2026-09-15 14:43:55
news-image

கடலோர பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத...

2026-09-14 16:24:05
news-image

இசைஞானி இளையராஜாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கிய 'ராவணன்...

2026-09-14 15:19:33
news-image

துருவ் விக்ரம் நடிக்கும் 'ஜாக்கி' படத்தின்...

2026-09-14 15:19:03
news-image

நடிகை ரைசா வில்சன் நடிக்கும் 'நோவா:...

2026-09-14 15:18:50
news-image

நாட்டார் கதையை பின்னணியாக கொண்ட 'தி...

2026-09-14 15:18:29