அறிமுக நடிகர் சந்தோஷ் கதையை வழி நடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரத்தில் தோன்றும் 'டபுள் ஒக்குபென்சி' எனும் புதிய திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகும் 'டபுள் ஒக்குபென்சி' எனும் திரைப்படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ் , சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துவரும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் ஃபேண்டஸியான காதல் கதையாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா மற்றும் அவ்னி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏசிஎஸ் அருண்குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதன் அறிமுக காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதில் இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்வியலை அறிவியல் புனைவுடன் ஃபேண்டஸியாக விவரித்திருப்பதால்... ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதனால் இந்த காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM