திருக்கயிலாய பரம்பரை தருமையாதீனம் அனைத்துலக பன்னிரு திருமுறை ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் ஓராண்டு சான்றிதழ் வகுப்பு இலங்கையில் ஆரம்பம்

17 Feb, 2026 | 05:16 PM
image

திருக்கயிலாய பரம்பரை தருமையாதீனம்  26 வது குருமஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய  சுவாமிகளின்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தருமை ஆதீன பன்னிருதிருமுறை ஆராய்ச்சி மையம் நிறுவி, அதன் வாயிலாக   உலகின் பல இடங்களில்   திருமுறை பயிற்சி மையம் தொடங்கும் திட்டத்தினை தருமை ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவித்துள்ளார்கள். அந்த வகையில்  இலங்கைத் திருநாட்டிலும் தருமையாதீனத்தின் திருமுறை வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது

இதற்கான தொடக்கவிழா இலங்கையில் கடந்த 06 ஆம் திகதி கொழும்பு இந்துமாமன்றத்தில் நடைபெற்றது. நிகழ்வில் தருமையாதீன 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் எழுந்தருளி,அருளாசிகள் வழங்கி வகுப்பினை தொடக்கிவைத்தார்கள்.

மேற்படி நிகழ்வில்  அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவர் திருமதி அபிராமி கயிலாசபிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார்கள்.  திருமதி காந்திமதி செல்வராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் ,இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.ய.அநிருத்தனன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சிவபூமி அறக்கட்டளை நிறுவனர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை நல்கினார்கள். முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார் அவர்கள் விளக்கவுரை ஆற்றினார்கள். செல்வி பா.யோகராணி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். நிகழ்வில் இந்து மாமன்றத்தினர் மற்றும்.இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பண்ணிசைப் பயிலுனர்கள், கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லுரி மானவர்கள், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மானவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ந டத்தப்படும் இணையவழி பண்ணிசை வகுப்பின் ஆசிரியர் தேவார இசைக்கலைமணி முனைவர் சிவகௌரி கிரீஷ் குமார் அவர்களை இலங்கை நாட்டின் தருமையாதீனத்தின் திருமுறை வகுப்புகளுக்கு பொறுப்பாளராக தருமை ஆதீனத்தின் குருமகா சந்நிதானம் நியமித்துள்ளார்கள். 

இலங்கையின் 18 மாவட்டங்களில்  மொத்தம் 141 நிலையங்களில் இவ்வகுப்புகள் நடைபெறவுள்ளன. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பண்ணிசை வகுப்பின் பயிலுனர்கள், மற்றும் திருமுறை ஆசிரியர்கள், சைவ அன்பர்கள் இந் நிலையங்களின் பொறுப்பாளர்களாகவும் ,ஆசிரியர்களாகவும் பணியாற்றவுள்ளனர். . ஆயிரக்கணக்கான மாணவர்களும் இத்திட்டத்தால் பயனடையவுள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல ஆலயங்கள் ,சமய நிறுவனங்கள். இவ்வகுப்புகள் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

இலங்கை நிலையங்களின் விபரங்கள்

நாடு முழுவதிலும் மொத்தம் 141 நிலையங்களில் தருமையாதீனத்தின் திருமுறை வகுப்புகள் நடைபெற உள்ளது.

மாவட்டப் பொறுப்பாளர்கள் விவரங்கள் மற்றும் நிலையங்களின் எண்ணிக்கை

1. யாழ்ப்பாண மாவட்டம் – 18 நிலையங்கள். திருமதி கீதநந்தினி சிவகுமாரக்குருக்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி-திருமதி தமிழ்ச்செல்வி மதியழகன் -3

மொத்த நிலையங்கள் -21

2 .  முல்லைத்தீவு மாவட்டம் – 11 நிலையங்கள் திருமதி சாந்தகுமாரி      கமலகாந்தன் 

3. கிளிநொச்சி மாவட்டம்- 05 நிலையங்கள் திருமதி இளங்கோவன் விஷந்தினி

4. மன்னார் மாவட்டம் –05 நிலையங்கள் திருமதி நாகபாலினி நந்தகுமார்

5. வவுனியா மாவட்டம்-05 நிலையங்கள் திருமதி தயாளினி ஜெயக்குமார்

6. திருகோணமலை மாவட்டம்- 5 நிலையங்கள் திருமதி அன்னலட்சுமி  வேலாயுதம் (நகரம்)

 திருகோணமலை புற நகர் - திருமதி சத்தியசீலன் உதயாதேவி 

. வெருகல்-10 நிலையங்கள் திரு பாலன் சுதாகரன்

மொத்தம் -15 நிலையங்கள்

7. மட்டக்களப்பு மாவட்டம்- 11 நிலையங்கள் திருமதி பக்தகௌரி மயூரவதனக்குருக்கள்

8. அம்பாறை மாவட்டம்- 02 நிலையங்கள் திரு குமாரசாமி ஜெயராஜ்

9. பொலனறுவை மாவட்டம்- 02 நிலையங்கள் திரு பாலன் சுதாகரன்

10. கண்டி மாவட்டம் – 05 நிலையங்கள் திருமதி யுகந்தினி முத்துக்குமார்

11. நுவரெலியா மாவட்டம் -03 நிலையங்கள் திரு.சுகுமார் சுப்ரமணியன்

12. பதுளை மாவட்டம் -25 நிலையங்கள் திரு செல்வநாயகம் இராஜதுரை

13. மாத்தளை மாவட்டம் – 02 நிலையங்கள் செல்வி யோகராணி பாலசுப்பிரமணிய சர்மா 

   இறத்தோட்டை தொகுதி- சைவப்புலவர் இரா.ஜீவன் பிரசான்

14. கொழும்பு மாவட்டம் (நகரம்) -06 நிலையங்கள் திருமதி காந்திமதி செல்வராஜ்

 கொழும்புமாவட்டம் (புறநகர்)- திருமதி சந்திராதேவி கிருஷ்ணபால் 

15. கம்பஹா மாவட்டம் – 02 நிலையங்கள் திருமதி தர்ஷினி சுகந்தன்

வத்தளை பிராந்தியம் -திருமதி ரூபி சுதாகரன்

16. காலி மாவட்டம் – 06 நிலையங்கள் திருமதி குகப்பிரியா கிருஷ்ணமூர்த்திக் குருக்கள். 

17. புத்தளம் மாவட்டம்- 01 நிலையம் திருமதி சஜிதா ஸ்ரீபவான்

18. இரத்தினபுரி மாவட்டம் –14 நிலையங்கள் திருமதி கமலேஸ்வரி பத்மநாதன்

திருமுறை  வகுப்புகளின் விபரங்கள்

அனைத்து வயதினரும் பயிலலாம்

பதிவுக்கட்டணம் (வருடத்திற்கு ஒருமுறை மட்டும்) பெரியவர்களுக்கு 1000 ரூபா

பள்ளி மாணவர்களுக்கு 500 ரூபா 

வகுப்புகள் மாதம் தோறும் இரண்டு நாட்கள் பௌர்ணமி தோறும் ,வாரம் ஒரு சனிக்கிழமை என்ற வகையில் விடுமுறை நாட்களில் நடைபெறும்.

பயிற்சி ஓராண்டு நிறைவில் பரீட்சைகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்

ஒரு வருட நிறைவில்  திருமுறை மணி

இரண்டாண்டு நிறைவில்   திருமுறை நன்மணி

மூன்றாண்டு நிறைவில் திருமுறை மாமணி ஆகிய பட்டங்கள் வழங்கப்படும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டாக்டர் அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையில்...

2026-03-12 18:16:04
news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10
news-image

சுனந்தாஜியின் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவின்...

2026-03-11 19:30:42
news-image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச...

2026-03-11 19:35:06
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலக்கிய களம்...

2026-03-11 11:03:56
news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09