காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தை உட­ன­டி­யாக அர­சாங்கம் நிறு­வ­வேண்டும் : ஐ.நா.

Published By: Priyatharshan

02 Sep, 2017 | 09:44 AM
image

இலங்கை அர­சாங்கம் காணாமல் போனோர் தொடர்­பாக ஆராயும் அலு­வ­ல­கத்தை  இது­வரை  நிறு­வாமல் இருக்­கின்­றமை பாரிய கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று ஐக்­கிய நாடு­களின் பல­வந்­த­மாக  காணா­மல்­போனோர் தொடர்­பாக ஆராயும் விசேட செயற்­குழு தெரி­வித்­தி­ருக்­கி­றது.  

அத்­துடன் இந்த அலு­வ­ல­கத்தை  விரை வில் நிறுவ நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென்றும்  2015 ஆம் ஆண்டு இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு தாம் முன்­வைத்த பரிந்­து­ரைகள் குறித்து அர­சாங்கம் உட­ன­டி­யாக கவனம் செலுத்­த­வேண்டும் என்றும்  ஐக்­கி­ய­நா­டு­களின்  பல­வந்­த­மாக  காணா­மல்­போனோர் தொடர்­பாக ஆராயும் விசேட செயற்­குழு  வலி­யு­றுத்­தி­யுள்­ளது.  

கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்­டு­களில் ஐ.நா.வின் இந்த  விசேட செயற்­குழு நாடு­க­ளுக்கு மேற்­கொண்ட  விஜ­யங்கள் தொடர்­பாக  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொட­ருக்கு  தாக்கல் செய்­துள்ள நீண்ட அறிக்­கை­யி­லேயே  இலங்கை தொடர்­பான இந்த வலி­யு­றுத்தல் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

ஐக்­கி­ய­நா­டு­களின்  பல­வந்­த­மாக  காணா­மல்­போனோர் தொடர்­பாக ஆராயும் விசேட செயற்­கு­ழு­வா­னது  கடந்த 2015 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டது. 

இலங்கை அர­சாங்­கத்தின்   அழைப்பின் பேரில் இலங்கை வந்த இந்த ஐ.நா. செயற்­கு­ழுவின் பிர­தி­நி­திகள்  நாட்டின் வடக்கு, கிழக்குப் பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்து  காணா­மல்­போனோர் தொடர்­பாக ஆராய்ந்­தி­ருந்­தனர். 

அத்­துடன் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் இலங்­கைக்­கான விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு திரும்­பு­வ­தற்கு முன்­ப­தாக கொழும்பில் செய்­தி­யாளர் மாநா­டொன்றை நடத்­திய காணா­மல்­போனோர் தொடர்­பான ஐ.நா.வின் விசேட செயற்­கு­ழுவின்  பிர­தி­நி­திகள் பல்­வேறு பரிந்­து­ரை­களை முன்­வைத்­தி­ருந்­தனர். 

அதில்  இந்த காணா­மல்­போனோர்   அலு­வ­லகம் தொடர்­பான பரிந்­து­ரையும் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.    அத்­துடன் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் 32 ஆவது கூட்டத்  தொட­ரிலும் இலங்கை தொடர்­பான முழு­மை­யாக அறிக்கை ஒன்றை  தாக்கல்  செய்­தி­ருந்­தனர். 

அந்­த­வ­கையில்  தற்­போது இலங்கை உட்­பட பல்­வேறு நாடு­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­பட்ட விஜ­யங்கள்    தொடர்­பி­லேயே ஒரு நீண்ட அறிக்­கையை   ஐ.நா. செயற்­குழு மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்­பித்­தி­ருக்­கி­றது. 

அதில் பல்­வேறு நாடு­க­ளி­னதும் காணாமல் போனோரின்  நிலைமை தொடர்­பான  புள்­ளி­வி­ப­ரங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. அது­மட்­டு­மன்றி ஒவ்­வொரு நாட்­டிற்கும் தனித்­த­னி­யா­கவே  பரிந்­து­ரைகள்  முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.  

அதன்­படி  இலங்­கைக்­காக முன்­வைக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை வரு­மாறு:-

இலங்­கையின்  காணா­மல்­போனோர்  தொடர்­பாக  நிறு­வப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­படும் நிரந்­தர அலு­வ­லகம்  இது­வரை அமைக்­கப்­ப­டாமை குறித்து ஐ.நா.வின் செயற்­குழு  பாரிய கவலை அடை­கி­றது.  இந்த  அலு­வ­லகம் இது­வரை அமைக்­கப்­பட்டு  தொழில்­ப­டாமை தொடர்பில்   நாங்கள் கவ­லை­ய­டை­கிறோம்.  இந்­த­நே­ரத்தில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு  முக்­கிய வலி­யு­றுத்­தலை விடுக்­க­வி­ரும்­பு­கிறோம். அதா­வது 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்   ஐ.நா.வின்  பல­வந்­த­மாக காணா­மல்­போனோர் குறித்த விசேட செயற்­குழு  இலங்­கைக்கு விஜ­யம்­மேற்­கொண்­ட­போது காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் முன்­வைத்த பரிந்­து­ரை­களை கவ­னத்தில் கொள்­ளு­மாறு இலங்கை அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கிறோம்.  

இதே­வேளை  ஐக்­கி­ய­நா­டுகள் மனித  உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 11ஆம் திகதி முதல்  29 ஆம் திக­தி­வரை  ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்­ளது. 

இதன்­போது  இலங்கை தொடர்­பான  விவா­தங்கள் எதுவும் பேர­வையின் கூட்­டத்­தொ­டரில் இடம்­பெ­றாது. இது­வரை வெளி­யி­டப்­பட்­டுள்ள நிகழ்ச்சி நிரலின் பிர­காரம்  இலங்கை விவ­காரம் எதுவும் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. 

எனினும் பொது­வான   விவா­தங்­க­ளின்­போது பல்­வேறு தலைப்­புக்­களின் கீழ் உரை­யாற்­ற­வுள்ள  சர்­வ­தேச அரச சார்­பற்ற  நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள் இலங்கை தொடர்பில் வலி­யு­றுத்­தல்­களை மேற்­கொள்­ளலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.   சர்­வ­தேச மனித உரிமை கண்­கா­ணிப்­பகம்  சர்­வ­தேச மன்­னிப்புச் சபை என்­பன இலங்கை குறித்து   வலி­யு­றுத்­தல்­களை  விடுக்­கலாம் என்று  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  

அது­மட்­டு­மன்றி சர்­வ­தேச  மனித உரிமை அமைப்­புக்கள் இந்த 36 ஆவது கூட்டத் தொடரின் போது ஜெனிவா வளா­கத்தில் இலங்கை விவ­காரம்  குறித்த  உபக்­கு­ழுக்­கூட்­டங்­களை  நடத்தும் என்றும்  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

  36 ஆவது கூட்டத்  தொடரில்  இலங்­கை­யி­லி­ருந்து அமைச்­சர்கள் மட்­டக்­குழு  பங்­கேற்க மாட்­டாது.  மாறாக ஜெனி­வா­வி­லுள்ள  இலங்கை  வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான குழு­வி­னரே 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்­பாக  கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். 

 அத்­துடன்  இந்தக் கூட்டத் தொடரில் பல­வந்­த­மாக காணா­மல்­போனோர் தொடர்­பாக   ஐ.நா.வின் விசேட செயற்­கு­ழுவின்  அறிக்கை தொடர்­பாக  விவா­திக்­கப்­ப­டும்­போது  இலங்கை தொடர்­பான  ஒரு­சில விட­யங்கள் முன்­வைக்­கப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.  

எதிர்­வரும் 11 ஆம்  திகதி 36 ஆவது கூட்டத் தொடரின் முத­லா­வது அமர்வு நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதில் உரை­யாற்­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன்  இலங்கை  நிலைமை தொடர்பில் சில விட­யங்­களை  முன்­வைக்­கலாம் என  நம்­பப்­ப­டு­கின்­றது.  

எனினும் இலங்கை தொடர்­பாக  உத்­தி­யோ­கப்­பூர்­வ­மான முறையில்  எந்­த­வொரு விவா­தமும் இல்­லாத நிலையில் அவர்  இலங்கை குறித்து பிரஸ்­தா­பிப்­பாரா என்­பதும் இதுவரை  உறுதிப்படுத்தப்படவில்லை. 

கடந்த 2016 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம்  முதலாவதாக காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும்  நிரந்தர அலுவலகம் குறித்த சட்டம் இலங்கை பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டது. எனினும் அதன் பின்னர் அதில் திருத்தங்கள் முன்வைக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டதையடுத்து  சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு  நிறைவேற்றப்பட்டது. 

அத்துடன் அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கமைய  காணமல்போனோர் குறித்த அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04