நியூஸிலாந்துக்கு எதிராக ரி20 உலகக் கிண்ண சதம் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தார் கனேடிய வீரர் யுவ்ராஜ்

17 Feb, 2026 | 04:40 PM
image

(நெவில் அன்தனி)

சென்னை சேப்பாக்கம் எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஐசிசி ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் கனடாவின் 19 வயதுடைய யுவ்ராஜ் சம்ரா அபார சதம் குவித்து சாதனை படைத்தார்.

ரி20 உலகக் கிண்ணப் போட்டி வரலாற்றில் ஐசிசி பூரண அந்தஸ்துபெற்ற நாடொன்றுக்கு எதிராக சதம் குவித்த முதலாவது இணை அங்கத்துவ நாட்டைச் சேர்ந்த வீரர் என்ற சாதனையை யுவ்ராஜ் இன்று நிலைநாட்டினார்.

மேலும் ரி20 உலகக் கிண்ண வராற்றில் கிறிஸ் கேல் (2), சுரேஷ் ரெய்னா, மஹேல ஜயவர்தன, ப்றெண்டன் மெக்கலம், அலெக்ஸ் ஹேல்ஸ், அஹ்மத் ஷெஹ்ஸாத், தமிம் இக்பால், ஜொஸ் பட்லர், ரைலி ரூசொவ், க்லென் பிலிப்ஸ், பெத்தும் நிஸ்ஸன்க ஆகியோரைத் தொடர்ந்து சதம் குவித்த 12ஆவது வீரர் யுவ்ராஜ் சம்ரா ஆவார்.

எனினும் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் கனேடிய அணியில் இல்லாததால் அப் போட்டியில் நியூஸிலாந்து 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

பூரண அந்தஸ்து நாடொன்றுக்கு எதிராக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் கனடா பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

யுவ்ராஜ் சம்ரா, அனுபவம்வாய்ந்த வீரரைப் போன்று மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணித் தலைவர் டில்ப்ரீத் பஜ்வாவுடன் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார்.

ரி20 உலகக் கிண்ணத்தில் சகல விக்கெட்களுக்குமான  கனடாவின் அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும்.

யுவ்ராஜ் சம்ரா 65 பந்துகளை எதிர்கொண்டு 11 பவண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 110 ஓட்டங்களைக் குவித்தார்.

டில்ப்ரீட் பஜ்வா 36 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களைவிட நவ்னீத் தாலிவல் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஜேக்கப் டஃபி (25 - 1 விக்.), மெட் ஹென்றி (28 - 1 விக்.) ஆகிய இருவரே ஒரளவு கட்டுப்பாட்டுடன் பந்துவீசினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 15.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

நியூஸிலாந்துக்கு ஆரம்பத்தில் சவால் விடுத்த கனடா பந்துவீச்சாளர்கள் அதன் முதல் இரண்டு விக்கெட்ளை 30 ஓட்டங்களுக்கு வீழ்த்தினர்.

ஆனால், க்லென் பிலிப்ஸ் (36 பந்துகளில் 4 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 76 ஓட்டங்கள்), ரச்சின் ரவிந்த்ரா (39 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 59 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 72 பந்துகளில் 146 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றயை இலகுவாக்கினர்.

ஆட்டநாயகன்: க்லென் பிலிப்ஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பத்து வீரர்களுடன் விளையாடி ஜாவா லேனின்...

2026-03-15 01:31:22
news-image

பொன் அணிகளின் போர் வெற்றிதோல்வியின்றி முடிவு

2026-03-15 01:32:27
news-image

வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த நீல வர்ணங்களின் சமரில்...

2026-03-15 01:19:21
news-image

யாழ். இந்துவை வீழ்த்தி கடந்த வருட...

2026-03-15 01:15:04
news-image

149ஆவது நீலவர்ணங்களின் சமர்: சென் தோமஸ்...

2026-03-14 04:44:29
news-image

ஆதம் ஹில்மி குவித்த சதத்தின் உதவியுடன்...

2026-03-14 04:39:33
news-image

சென். பட்றிக்ஸ் அணிக்கு கடைநிலை வீரர்...

2026-03-13 21:00:51
news-image

இந்துக்களின் சமரில் அடுத்தடுத்த அத்தியாயங்களில்  சுபர்ணன்...

2026-03-13 21:06:05
news-image

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமானது 15ஆவது இந்துக்களின்...

2026-03-13 15:07:11
news-image

15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின்...

2026-03-13 01:26:48
news-image

புனித அந்தோனியார் 157, திரித்துவம் 66...

2026-03-12 21:22:49
news-image

ஹார்மிஷன் துடுப்பாட்டத்திலும் ஆதித்தியா பந்துவீச்சிலும் அபாரம்;...

2026-03-12 20:22:39