இலங்கைக்கு 182 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது அவுஸ்திரேலியா

Published By: Vishnu

16 Feb, 2026 | 09:10 PM
image

(பல்லேகலை அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கண்டி பல்லேகலையில் நடைபெற்றுவரும் இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தீர்மானம் மிக்க ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுக்கு ஓட்டங்களை அள்ளிக்கொடுத்த இலங்கை பந்துவீச்சாளர்கள் 9ஆவது ஓவரிலிருந்து துல்லியமாக பந்துவீசி எதிரணியைக் கட்டுப்படுத்தினர்.

அணிக்கு மீண்டும் திரும்பிய அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் (54), ட்ரவிஸ் ஹெட் (56) ஆகிய இருவரும் 51 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன. (130 - 4 விக்.)

இந் நிலையில் ஜொஷ் இங்லிஸ் (27), க்லென் மெக்ஸ்வெல் (22) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர்.

ஆனால், க்ளென் மெக்ஸ்வெல் உட்பட 6 விக்கெட்கள் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.

துஷான் ஹேமன்த 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வெவ்வேறு வியூகங்களுடன் பந்துவீசிய துஷ்மன்த சமீர 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

182 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இலங்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பத்து வீரர்களுடன் விளையாடி ஜாவா லேனின்...

2026-03-15 01:31:22
news-image

பொன் அணிகளின் போர் வெற்றிதோல்வியின்றி முடிவு

2026-03-15 01:32:27
news-image

வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த நீல வர்ணங்களின் சமரில்...

2026-03-15 01:19:21
news-image

யாழ். இந்துவை வீழ்த்தி கடந்த வருட...

2026-03-15 01:15:04
news-image

149ஆவது நீலவர்ணங்களின் சமர்: சென் தோமஸ்...

2026-03-14 04:44:29
news-image

ஆதம் ஹில்மி குவித்த சதத்தின் உதவியுடன்...

2026-03-14 04:39:33
news-image

சென். பட்றிக்ஸ் அணிக்கு கடைநிலை வீரர்...

2026-03-13 21:00:51
news-image

இந்துக்களின் சமரில் அடுத்தடுத்த அத்தியாயங்களில்  சுபர்ணன்...

2026-03-13 21:06:05
news-image

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமானது 15ஆவது இந்துக்களின்...

2026-03-13 15:07:11
news-image

15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின்...

2026-03-13 01:26:48
news-image

புனித அந்தோனியார் 157, திரித்துவம் 66...

2026-03-12 21:22:49
news-image

ஹார்மிஷன் துடுப்பாட்டத்திலும் ஆதித்தியா பந்துவீச்சிலும் அபாரம்;...

2026-03-12 20:22:39