லண்டனில் தீவிரமாக பரவி வரும் அம்மை நோய் ; 34 சிறுவர்கள் பாதிப்பு 

17 Feb, 2026 | 12:46 PM
image

வடக்கு லண்டனில் பல பாடசாலைகளில் அம்மை நோய் வேகமாக பரவி வருவதாகவும் குறைந்தது 34 சிறுவர்கள் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த நோய் காரணமாக ஐந்து சிறுவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் அங்குள்ள பொது மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

கடும் உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய இந்த தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் தங்கள் பிள்ளைகளுக்கு செலுத்தப்பட்டதை உறுதி செய்துகொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

என்ஃபீல்ட் மற்றும் ஹாரிங்கியில் குறைந்தது 7 பாடசாலைகளில் அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த ஆண்டின் (2026) முதல் மாதத்தில் இங்கிலாந்து முழுவதும் 96 பேர் அம்மையால் பாதிக்கப்பட்டதாகவும் இதில் மூன்றில் ஒரு பங்காக, என்ஃபீல்ட்டில் 34 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அம்மையில் பாரிய தாக்கம் கொண்ட தொற்றானது பெரும்பாலும் பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளில் கற்கும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களையே அதிகமாக பாதிக்கிறது என இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈராக் வான்வெளியில் அமெரிக்க எரிபொருள் நிரப்பு...

2026-03-13 09:58:02
news-image

மேற்காசியாவில் பதற்றம் தீவிரம் : ஹோர்மூஸ்...

2026-03-13 09:10:20
news-image

நேபாளத் தேர்தலில் ரெப் பாடகர் பாலேந்திர...

2026-03-13 09:00:03
news-image

ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக...

2026-03-12 22:10:15
news-image

அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை...

2026-03-13 08:47:25
news-image

உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை...

2026-03-12 16:16:18
news-image

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நவீன 'ஏஐ'...

2026-03-12 16:35:13
news-image

ஆசிய பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி...

2026-03-12 13:57:02
news-image

மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும்...

2026-03-12 14:38:15
news-image

துபாயில் விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன்...

2026-03-12 14:55:36
news-image

டெல்லியில் பயங்கர தீ விபத்து :...

2026-03-12 11:06:01
news-image

போர் நிறுத்தத்திற்கு நிபந்தனைகளை முன்வைத்தார்: ஈரான்...

2026-03-12 11:06:42