கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் 2 கிலோ கஞ்சா பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் போதைப்பொருள் ஒழிப்பு விசேட பொலிஸ் பிரிவினரினால் குறிதத் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் போதைப்பொருள் ஆகியன நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர் மீது தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.