சின்னத்திரை நட்சத்திர நடிகரான சித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'டார்க் ஹெவன்' எனும் திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் 'டார்க் ஹெவன்' எனும் திரைப்படத்தில் சித்து, 'பிக் பொஸ்' தர்ஷிகா, 'நிழல்கள்' ரவி, வேல. ராமமூர்த்தி, ரித்விகா, அருள் ஜோதி , ஜெயக்குமார் ,ஜானகிராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. கே மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைத்திருக்கிறார்.
கிரைம் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை கோதை எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ் எம் மீடியா ஃபேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி அன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு பின்னணி பேசும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''மக்களிடம் மரபு வழியாக பரவி இன்றும் செல்வாக்குடன் திகழும் தொன்மம் சார்ந்த கதைக்கு இன்றைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் க்ரைம் திரில்லராக இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM