இலங்கை கடற்படையின் 21 ஆவது கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா இன்று பிரதேச அபிவிருத்தி அமைச்சில் வைத்து  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்தித்துள்ளார்.

கடற்படையின் 21ஆவது கட்டளைத் தளபதியாக ட்ராவிஸ் சின்னையா பொறுப்பேற்ற பின்னர் சரத் பொன்சேகாவை சந்தித்த உத்தியோக பூர்வ முதல் சந்திப்பு இதுவேயாகும்.

இச் சந்திப்பின் போது சரத் பொன்சேகா ட்ராவிஸ் சின்னையாவிற்கு அதி உயர் கடற்படை பதவியை பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு சுமுகமான கலந்துரையாடலில் இருவரும் ஈடுபட்டனர்.

கலந்துரையாடலின் பின்னர் கடற்படை தளபதி சரத் பொன்சேகாவிற்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தார்.