வட அமெரிக்காவின் மெக்சிக்கோ நாட்டிலுள்ள அஸ்டெகா பல்கலைக்கழகம் (Azteca University), இலங்கையின் மெற்றோபொலிட்டன் வணிக முகாமைத்துவ நிறுவனத்துடன் (MIBM) உத்தியோகபூர்வமாக கைகோர்த்துள்ளது.
இதன் மூலம் இலங்கையிலேயே சர்வதேச தரத்திலான பட்டப்படிப்புகளைப் பயிலும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது.
இந்தக் கல்விசார் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் அஸ்டெகா பல்கலைக்கழகத்தின் இயக்குனரும் சர்வதேச கற்கைநெறிகளின் தலைவருமான கலாநிதி ரிக்கார்டோ சாவேத்ரா ( Dr Ricardo Saavedra ) மற்றும் MIBM நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான செல்வரத்தினம் நிமால் ( Mr Selvaratnam Nimal ) ஆகியோருக்கு இடையில் கையெழுத்திடப்பட்டது.
MIBM நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி செல்வரத்தினம் நிமால், அஸ்டெகா பல்கலைக்கழகத்தின் உலகளாவிய முகவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் ஊடாக மாணவர்கள் அஸ்டெகா பல்கலைக்கழகத்தின் இளங்கலை , முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கான கற்கை நெறிகளை இலங்கையின் MIBM இல் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் கிட்டியுள்ளன.
அஸ்டெகா பல்கலைக்கழகம் சர்வதேச பல்கலைக்கழகங்களின் சங்கத்தில் உறுப்பினராக உள்ளதால், அதன் பட்டங்கள் இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவை.
31 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இப்பல்கலைக்கழகம் மெக்ஸிகோ கல்வி அமைச்சின் அங்கீகாரம் பெற்றதுடன், ஜேர்மனியின் பெர்லின் கல்வி அமைச்சு மற்றும் சர்வதேச பல்கலைக்கழக கையேட்டிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தரமான கல்வியை வழங்கி வரும் MIBM நிறுவனம், கல்விசார் கற்கை நெறிகளுக்கு மேலதிகமாக, நிறுவனங்களுக்கான உள்ளக மற்றும் வெளியக பயிற்சிகளையும் வழங்கி வருகின்றது.
"திறமையான மற்றும் தகுதியான நிறுவனமாக MIBM-ஐக் கருதி இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம்," என கலாநிதி ரிக்கார்டோ சாவேத்ரா தெரிவித்துள்ளார்.
தற்போது மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 0776615152 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம் அல்லது info@mibm.lk என்ற மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொள்ளலாம்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM