காத்தான்குடி - பைசல் வீதியில், முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான 19 வயது இளைஞர் அருகில் இருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்தவர் தற்போது மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியின் சாரதியான, காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி பலத்தை சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM