முல்லைதீவு, சுதந்திரபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரம்  இன்றி நேற்று இரவு மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஒன்பது  சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக பொலிஸாரிற்கு  கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து  கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான   பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ்  வெளிகன்னவின்  ஆலோசனையின் கீழ் உப பொலிஸ்  பரிசோதகர் இந்து பிரதீபன்  தலைமையிலான விஷேட குழுவினர்  குறித்த பகுதியை முற்றுகை இட்டதில்  சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய 9  சாரதிகள்  கைதுசெய்யப்பட்டுள்ளனர் .

சாரதிகளை கைது செய்ததோடு மணல் ஏற்றுவதற்க பயன்படுத்திய 9 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட  சாரதிகளும் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நாளை புதுக்குடியிருப்பு பொலிஸாரால் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.