தமிழ் மக்­களின் உணர்­வு­களை புரிந்­து­கொள்­வது அவ­சியம்

15 Feb, 2026 | 04:24 PM
image

தமிழ் மக்­களின் உணர்­வு­களை புரிந்­து­கொண்டு அதற்­கேற்ற வகையில் தமிழ் தேசியக் கட்­சி­களின் தலை­மைகள் செயற்­பட வேண்­டி­யதன் அவ­சியம் தற்­போது தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

கொடூர யுத்­தத்­தினால் பெரும் பாதிப்­பு­களை சந்­தித்த தமிழ் மக்கள் இன்றும் தமது அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படைப் பிரச்­சி­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கும் தீர்­வின்றி அவ­ல­மான வாழ்க்­கை­யையே வாழ்ந்து வரு­கின்­றனர்.

யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு 16 வரு­டங்கள் கடந்து விட்ட போதிலும் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு இன்­னமும் தீர்­வு­கா­ணப்­ப­ட­வில்லை என்ற விடயம் மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

வடக்கு, கிழக்கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ணப்­படும் என்று தற்­போது ஆட்சில் உள்ள தேசிய மக்கள் சக்தி வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்த போதிலும் இது­வ­ரையில் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. யுத்­தத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உயிர்­களை பறி­கொ­டுத்த தமி­ழினம், பல்­வேறு மனித உரிமை மீறல்­களை சந்­தித்த தமி­ழினம், தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதி­யான விசா­ரணை நடத்­தப்­பட்டு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்று தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றது.

இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு தமக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்று தமிழ் மக்கள் கோரி வரு­கின்ற போதிலும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் கடந்த 16 வரு­டங்­களில் மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­க­வில்லை.

இதே­போன்­றுதான் யுத்­தத்­துக்கு அடிப்­படைக் கார­ண­மான இனப்­பி­ரச்­சி­னைக்கும் அர­சியல் தீர்வு இன்­னமும் எட்­டப்­ப­ட­வில்லை. இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழ் தேசியக் கட்­சிகள் செயற்­பட வேண்டும் என்­பதை தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­பா­க­வுள்­ளது.

இந்த விட­யங்­களில் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­மைகள் ஒன்­றி­ணைந்து ஒரு­மைப்­பாட்­டுடன் செயற்­பட்டு தமது அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யக் கூடிய தீர்­வினைப் பெறு­வ­தற்கு உந்­து­சக்­தி­யுடன் செயற்­பட வேண்டும் என்ற எதிர்­பார்ப்பே தமிழ் மக்­க­ளிடம் காணப்­ப­டு­கின்­றது.

ஆனால், தற்­போ­தைய நிலையில் தமிழ் தேசியக் கட்­சி­களின் தலை­மைகள் சுய­நல அர­சியல் நோக்­குடன் செயற்­பட்டு வரு­வதை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும் என்றும் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வைக்­காண நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் உறுதி வழங்­கி­யி­ருந்­தது.

ஆனால், இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்­பிலோ அல்­லது யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பொறுப்­புக்­கூறும் வகை­யி­லான செயற்­பாட்டை முன்­னெ­டுப்­பது குறித்தோ தேசிய மக்கள் சக்தி அர­சாங்­க­மா­னது அக்­க­றை­யின்றி செயற்­பட்டு வரு­கின்­றது. இந்த நிலையில் தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு குறித்தும் அவர்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு தொடர்­பிலும் தமிழ் தேசியக் கட்­சிகள் ஒரு­மித்த தீர்­மா­னத்­துக்கு வந்து அதற்­கான அழுத்­தங்­களை அர­சாங்­கத்­துக்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் கொடுக்க வேண்­டிய அவ­சி­யமும் அவ­ச­ரமும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

தமிழ் தேசியக் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு தொடர்பில் பொது­வான திட்­ட­வ­ரை­பொன்றை தயா­ரித்து அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான அழுத்­தங்­களை கொடுக்க வேண்­டி­யதன் அவ­சியம் சுட்­டக்­காட்­டப்­பட்டு வரு­கின்­றது.

ஆனால், அதற்­காக ஒன்­று­ப­டவோ அல்­லது ஒன்­றி­ணைந்து திட்­ட­வ­ரை­பொன்றை தயா­ரிப்­ப­தற்கோ தமிழ்த் தேசியக் கட்­சிகள் தயா­ராக இல்லை. சுய­நல அர­சி­யலை நோக்­காகக் கொண்டு இந்த விவ­கா­ரத்தில் எதிரும் புதி­ரு­மான நிலைப்­பாட்டை எடுக்கும் வகை­யி­லேயே தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­மைகள் செயற்­பட்டு வரு­கின்­றதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் பொது இனக்­கப்­பா­டொன்றை எட்­டப்­பட வேண்டும் என்ற அவ­சியம் குறித்து கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது. இந்த விவ­கா­ரத்தில் ஏனைய கட்­சி­க­ளுடன் கலந்­து­ரை­யாட தயார் என்று அந்தக் கட்சி அறி­வித்­தி­ருந்­தத. ஆனால், அந்த முயற்சி பய­ன­ளித்­தி­ருக்­க­வில்லை.

இத­னை­ய­டுத்து இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யா­னது இந்த விடயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்­து­வ­தற்கு தயார் என்று அறி­வித்­தி­ருந்­தது. ஜன­நா­யக தமிழ்த் தேசிய கூட்­ட­ணி­யுடன் இந்த விடயம் தொடர்பில் சில கலந்­து­ரை­யா­டல்­களும் நடத்­தப்­பட்­டன. தமி­ழ­ரசுக் கட்­சியும் ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணியும் அர­சியல் தீர்வு விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யாடி பொது ஆவ­ன­மொன்றை தயா­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­பது என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனாலும் இந்தக் கலந்­து­ரை­யா­டலில் பங்­கேற்­ப­தற்கு கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி சம்­ம­தித்­தி­ருக்­க­வில்லை. இதேபோல் சி.வி.விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் கூட்­ட­ணியும் இணக்­கப்­பா­டொன்­றுக்கு வந்­தி­ருக்­க­வில்லை.

இந்த நிலையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விட­யத்தில் சகல தரப்­பு­க­ளையும் ஒரு­மித்த நிலைப்­பாட்­டுக்கு கொண்டு வரும் நோக்கில் சுவிட்­சர்­லாந்து தூத­ர­கத்தின் ஏற்­பாட்டில் தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு இடையில் எதிர்­வரும் 19ஆம் திகதி சந்­திப்­பொன்­றுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

சுவிட்­சர்­லாந்து தூத­ர­கத்தின் ஒருங்­கி­ணைப்பில் இந்தக் கூட்டுச் சந்­திப்பை நடத்­து­வ­தற்கு தமிழ்த் தேசிய கட்­சிகள் உடன்­பட்­ட­தை­ய­டுத்து இதற்­கான முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் சார்­பிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி சார்­பிலும் ஜன­நா­யக தமிழ்த் தேசிய கூட்­டணி சார்­பிலும் யார், யார் பங்­கேற்­பது என்­பது குறித்தும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­மை­க­ளுக்கு இடையில் ஏற்­பட்ட ஏட்­டிக்குப் போட்­டி­யான நிலைமை கார­ண­மாக இந்தச் சந்­திப்பும் தற்­போது ஒத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தூத­ர­கத்தின் ஏற்­பாட்டில் கூட்டுச் சந்­திப்­புக்கு இணங்­கிய கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர், எதிர்­வரும் 15ஆம் திகதி அர­சியல் தீர்வு குறித்து தமிழ் தேசிய தரப்­பி­னரை உள்­ள­டக்கி கூட்­ட­மொன்­றுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர்.

இத்­த­கைய ஏற்­பாடு தொடர்பில் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் செய­லாளர் எம்.சுமந்­திரன் அதி­ருப்தி கொண்­டி­ருந்த நிலை­யி­லேயே சுவிட்­சர்­லாந்து தூத­ர­கத்தின் ஏற்­பாட்டில் நடை­பெ­ற­வி­ருந்த கூட்­டத்தை இரத்து செய்­யு­மாறு கோரி­யி­ருக்­கின்றார். இத­னை­ய­டுத்து தூத­ர­கத்தின் ஏற்­பாட்டில் நடை­பெ­ற­வி­ருந்த கூட்டம் இரத்துச் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

19ஆம் திகதி தூத­ர­கத்தின் ஏற்­பாட்டில் இடம்­பெ­ற­வி­ருந்த கூட்­டத்­துக்கு இணக்கம் தெரி­வித்­தி­ருந்த கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான கூட்­ட­மொன்றை ஏன் ஏற்­பாடு செய்தார் என்ற விடயம் குறித்தும் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. ஆனால், தூத­ர­கத்தின் ஏற்­பாட்­டுக்கு முன்­னரே தான் இந்தக் கூட்­டத்தை நடத்­து­வ­தற்­கான முன் முயற்­சி­களை ஆரம்­பித்து விட்­ட­தாக கஜேந்­தி­ர­குமார் விளக்கம் கூறி­யுள்ளார்.

‘தூத­ர­கத்தின் ஏற்­பாட்டில் பேச்­சு­வார்த்தை இடம்­பெ­ற­வி­ருந்த நிலையில் கஜேந்­தி­ர­குமார் ஏன் பொதுக் கூட்­டத்தை நடத்த முற்­பட்டார்? அதில் உள்­நோக்கம் இருக்­கின்­றது’ என்­பதே சுமந்­தி­ரனின் குற்­றச்­சாட்­டாக இருக்­கின்­றது. இவ்­வாறு சுவிட்­சர்­லாந்து தூதரகத்தின் மூலம் பொது இணக்கப்பாட்டை எட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியானது தற்போது தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளின் ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாட்டினால் இல்லாது போயுள்ளது.

வெறுமனே சுயநல அரசியலை கருத்தில்கொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் இவ்வாறு தொடர்ந்தும் செயற்படுமானால் தமிழ் மக்கள் மாற்றுத் தலைமைகளை தெரிவு செய்யும் நிலைமை நிச்சயமாக ஏற்படும். கடந்த பொதுத் தேர்தலில் சிறந்த அனுபவத்தை பெற்ற பின்னரும் கூட தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் தான்தோன்றித்தனமாக செயற்பட முனைவதானது எந்த வகையிலும் தமிழ்த் தேசியத்தை கட்டிக்காப்பதற்கு உதவப் போவதில்லை.

எனவே, தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தியாவது தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைமைகள் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படவில்லையானால் பாரதூரமான முடிவினை சந்திக்க வேண்டி வரும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இணக்கம்...

2026-03-08 12:09:56
news-image

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் அக்­க­றை­யற்­றி­ருக்கும் அர­சாங்கம்

2026-03-01 12:37:43
news-image

இன ஒற்றுமைக்கான செயற்பாட்டுடன் தமிழர் பிரச்சினைக்கு...

2026-02-23 11:17:39
news-image

தமிழ் மக்­களின் உணர்­வு­களை புரிந்­து­கொள்­வது அவ­சியம்

2026-02-15 16:24:39
news-image

இரு துருவ நிலைப்பாட்டினை இல்லாதொழிக்க வழி...

2026-02-08 07:13:22
news-image

மௌனிக்கப்படுகிறதா ஜனநாயக உரிமை?

2026-02-01 10:00:29
news-image

அரசியல் தீர்வு திட்டவரைவை ஒன்றிணைந்து தயாரிக்க...

2026-01-25 11:17:06
news-image

இனியும் காலதாமதம் வேண்டாம்

2026-01-04 14:25:10
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அழுத்தம்...

2025-12-28 12:29:59
news-image

பாதுகாப்பான பகுதிகளில் மக்களை குடியேற்ற வேண்டும்

2025-12-14 14:48:36
news-image

இந்தியாவின் உடனடி உதவியும் இணைந்த செயற்பாட்டின்...

2025-12-07 16:13:55
news-image

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதயசுத்தியான செயற்பாடு தேவை

2025-11-30 10:32:53