இலங்கைப் பாடசாலைகள் காற்பந்தாட்ட சங்கம் அகில இலங்கை ரீதியில் நடத்திய 14 வயதுப் பிரிவினருக்கான SAMAPOSHA CHAMPION TROPHY கிண்ணத்துக்கான காற்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி வீரர்களுக்கு மகத்தான கௌரவிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (13) சென் பற்றிக்ஸ் கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் கல்லூரி அதிபர் அருட்திரு A P திருமகன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
பாண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட காற்பந்தாட்ட அணிவீர்கள் பெற்றோருடன் சென் பற்றிக்ஸ் வீதியூடாக அழைத்து வரப்பட்டனர்.
இக் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் சார்பில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவகரன் சிறப்பு விருந்தினராக யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்கலாநிதி PJ ஜெபரட்ணம் அடிகளாரும் பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் வீரர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கி பெற்றோருடன் கௌரவிக்கப் பட்டனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM