நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் இன்று காலை முதல்  ஹட்டன் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதிக வெள்ளம் பெருக்கெடுத்து  பல்வேறு தொழில் துறைகளும் பெரிதும் பதிப்படைந்துள்ளது .

ஹட்டன், தலவாக்கலை, நுவரெலியா ஆகிய பகுதிகளில் தேயிலை மலைகளில் தொழில் புரியும் தொழிலாளர்களது வாழ்க்கையும், நகர வியாபாரிகள் மற்றும் தொழிற்புரிவோரினதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  

மேலும் நகரங்களின் பிரதான வீதிகளிலும், குறுக்கு பாதைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்மையினால் பாதசாரிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் .

வாகன  சாரதிகளை  அவதானதுடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.