"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்: ஒரே நாளில் 744 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

Published By: Digital Desk 1

15 Feb, 2026 | 12:22 PM
image

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று சனிக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 744 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 10 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 741 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், மூவர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 334 கிராம் ஹெரோயின், 325 கிராம் ஐஸ், 02 கிராம் 300 மில்லிகிராம் கொக்கெய்ன், 348 கிலோகிராம் 03 கிராம் கஞ்சா, 13,987 கஞ்சா செடிகள், 320 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 50 கிலோகிராம் 244 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 285 போதை மாத்திரைகள், 326 கிராம் 80 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 215 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிபந்தனையற்ற நீதி...

2026-04-21 14:58:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அரசியல்...

2026-04-21 14:50:48
news-image

'கஞ்சிபானை இம்ரான்' உடன் தொடர்புடைய முக்கிய...

2026-04-21 14:49:33
news-image

வவுனியாவில் டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த...

2026-04-21 14:49:11
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-04-21 14:05:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : தற்போதைய...

2026-04-21 13:29:54
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர...

2026-04-21 13:03:48
news-image

“7 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி!"...

2026-04-21 12:54:12
news-image

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

2026-04-21 12:50:39
news-image

நீதியை நிலைநாட்டுவதில் அசமந்தப்போக்குடன் செயற்பட்டால் சர்வதேச...

2026-04-21 13:05:57
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் 7ஆவது...

2026-04-21 12:15:57
news-image

மட்டக்களப்பில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

2026-04-21 12:12:12