ஸ்கொட்லாந்துடனான போட்டியில் அவசியமான வெற்றியை ஈட்டியது இங்கிலாந்து

15 Feb, 2026 | 07:41 AM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் கொல்கொத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்களில் இன்று சனிக்கிழமை (14) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்களால் மிக அவசியமான வெற்றியை ஈட்டியது.

இக் குழுவில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி அடைந்ததால் நெருக்கடியை எதிர்கொண்ட இங்கிலாந்துக்கு இன்றைய வெற்றி ஆறுதல் அளித்துள்ளதுடன் சுப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான அதன் வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ஆதில் ராஷித், ஜொவ்ரா ஆச்சர் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளும் டொம் பென்டனின் ஆட்டம் இழக்காத அரைச் சதமும் இங்கிலாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் (49), மைக்கல் ஜோன்ஸ் (33), டொம் ப்றூஸ் (24), ஒலிவர் டேவிட்சன் (20) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆதில் ராஷித் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லியாம் டோசன் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

153 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 18.2 ஒவர்களில் 5 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று வெற்றயீட்டியது.

ஆரம்ப வீரர்கள் பில் சோல்ட், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்ததும் இங்கிலாந்து சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (13 - 2 விக்.)

எனினும் ஜேக்கப்  பெத்தெல், டொம் பென்டன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

 

ஜேக்கப் பெத்தெல் 32 ஓட்டங்களுடன் வெளியேறியதுடன் ஹெரி ப்றூக் 4 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். இதனால் இங்கிலாந்து மீண்டும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

இந் நிலையில் டொம் பென்டன், சாம் கரன் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை அண்மிக்க உதவினர்.

சாம் கரன் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து டொம் பென்டன், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் வெற்றி இலக்கை அடைய உதவினர்.

டொம் லென்டன் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 63 ஓட்டங்களுடனும் வில் ஜெக்ஸ் 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தனர்.

ஆட்டநாயகன்: டொம் பென்டன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின்...

2026-03-13 01:26:48
news-image

புனித அந்தோனியார் 157, திரித்துவம் 66...

2026-03-12 21:22:49
news-image

ஹார்மிஷன் துடுப்பாட்டத்திலும் ஆதித்தியா பந்துவீச்சிலும் அபாரம்;...

2026-03-12 20:22:39
news-image

149ஆவது நீல வர்ணங்களின் சமர்: ஜேடன்,...

2026-03-12 20:16:47
news-image

புனித பேதுருவானவர் றக்பி அணிக்கான ஜேர்சி...

2026-03-12 12:51:13
news-image

திரித்துவம் - புனித அந்தோனியார் மோதும்...

2026-03-12 10:28:56
news-image

109ஆவது பொன் அணிகளின் போர் கிரிக்கெட்டில் ...

2026-03-12 13:10:06
news-image

ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு...

2026-03-12 05:15:29
news-image

இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெள்ளைப் பந்து...

2026-03-11 16:30:26
news-image

டயலொக் ஜனாதிபதி கிண்ண நொக் அவுட்...

2026-03-10 15:09:09
news-image

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக...

2026-03-09 19:42:23
news-image

நியூஸிலாந்தை 96 ஓட்டங்களால்  வீழ்த்தி மூன்று...

2026-03-08 23:35:05