வட்டவளை பகுதியில் இன்று சனிக்கிழமை (14) வாகனத்தில் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் காப்பாற்றி மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
வட்டவளை பகுதியில் உள்ள ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில், ஒரு குட்டி சிறுத்தை ஒன்று வாகனத்தில் மோதி கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய வட்டவளை பொலிஸ் பொறுப்பதிகாரி, தலைமை பரிசோதகர் சந்தன கமகே சம்பவ இடத்திற்குச் சென்று இது குறித்து விசாரணை மேற்கொண்டு நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
தொடர்ந்து நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்து மிகுந்த முயற்சிக்குப் பிறகு வாகனத்தில் மோதி நடக்க முடியாமல் தவித்த குட்டியை பாதுகாக்க மீட்டு சிகிச்சைக்காக ரந்தெனிகல கால்நடை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர் .













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM