திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர சபையால் துரித நடவடிக்கை ஆரம்பம்!

14 Feb, 2026 | 05:29 PM
image

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டணத்தெரு பகுதி அண்மையில் கடலரிப்பு மூலமாக மிகவும் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் ஒன்றும் கடலுக்கடியில் தாழ் இறங்கியுள்ளது.

குறித்த கரையோர பகுதியை சீரமைக்கும் பணி சனிக்கிழமை (14) திருகோணமலை மாநகர சபை, பட்டினத்தெரு மீனவர்கள், இளைஞர்கள் இணைந்து கடலரிப்பில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இவ்வாறான நிலையில் இதனை பார்வையிட. இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர சபை மேயர் கந்தசாமி செல்வராசா ஆகியோர்களும் களத்துக்கு சென்று புனரமைப்பு பணிகளை அவதானித்ததுடன் இது தொடர்பில் மேலும் உரிய அதிகாரிகளுடன் புனரமைப்பு பணிகளை முழுமையாக பூர்த்தி செய்து தருவதாகவும் அப்பகுதி மீனவர்களிடத்தில் தெரிவித்தனர். 

குறித்த கரையோர மக்களின் கடலரிப்பு பாதிப்பு தொடர்பில் மாநகர சபையின் விசேட சபை அமர்வின் போது பிரேரனைகள் முன்வைக்கப்பட்டன.

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற கால நிலையின் காரணமாக குறித்த பகுதி கடலரிப்பினை எதிர்நோக்கியிருந்ததுடன் மீனவக் குடும்பங்களும் இதனால் கடலுக்கு செல்ல முடியாது பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டனர்.

இந்த நிலையில் கரையோர பகுதி மீள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் மாநகர சபை உறுப்பினர் உதய குமார் அஜித் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் பங்களிப்போடு புதிய அரசியலமைப்பு வேண்டும்...

2026-09-12 15:07:30
news-image

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக...

2026-09-12 16:17:37
news-image

கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ்...

2026-09-12 16:17:21
news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07
news-image

மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை:...

2026-09-12 15:45:08
news-image

தெஹிவளை கைகுண்டுத் தாக்குதல்: இலக்கு மாறியதால்...

2026-09-12 15:38:43
news-image

வீடு புகுந்து திருட்டு மற்றும் குற்றச்...

2026-09-12 15:16:55
news-image

26 நகரங்களை அபிவிருத்தி செய்ய 65...

2026-09-12 14:49:30
news-image

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு...

2026-09-12 15:13:56
news-image

தனமல்விலவில் 114 கிலோவிற்கும் அதிக கஞ்சாவுடன்...

2026-09-12 15:11:22
news-image

தனமல்வில வீதி விபத்து: நான்கு இளைஞர்கள்...

2026-09-12 14:48:44