இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் இல்லாத ரசிகர்கள் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சுற்றித்திரிய வேண்டாம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

14 Feb, 2026 | 02:01 PM
image

கொழும்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் இல்லாத ரசிகர்கள்,  டிக்கெட் பெறும் நோக்கத்தில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சுற்றித்திரிய வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

போட்டியை பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் நடத்துவதற்காக விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் விதிமுறைகளைப் பின்பற்றி பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பாதுகாப்பு நடைமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்வையிட வரவுள்ள ரசிகர்கள், பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி போத்தல்களை மைதானத்திற்குள் கொண்டு வருவதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதையும் கொண்டு வராமல் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

போட்டியை அமைதியானதும் பாதுகாப்பானதுமான சூழலில் நடத்துவதற்கு பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது!

2026-03-06 14:00:29
news-image

ஜனவரியில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி சரிவு;...

2026-03-06 13:41:47
news-image

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய...

2026-03-06 14:01:02
news-image

Update; யாழில் இருந்து பாலை தீவு...

2026-03-06 12:50:23
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-06 12:49:11
news-image

2026/2027 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழிற்கல்விப்...

2026-03-06 13:00:44
news-image

யாழில் இருந்து பாலை தீவு சென்ற...

2026-03-06 12:42:10
news-image

அரச சேவையின் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க...

2026-03-06 12:37:11
news-image

கிணற்றில் விழுந்த யானையும் குட்டியும் பாதுகாப்பாக...

2026-03-06 12:20:49
news-image

மதுரங்குளியில் விபத்து ; மாணவர்கள் இருவர்...

2026-03-06 11:19:19
news-image

கட்டுநாயக்கவில் 11 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர்...

2026-03-06 10:52:42
news-image

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள்...

2026-03-06 10:43:17