அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அந்நாட்டுக்கு அருகே அமெரிக்காவின் சக்திவாய்ந்த கடற்படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அணுசக்தி தொடர்பான விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இதுவரை எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஒரு போர்க்கப்பல்
பதற்ற நிலை அதிகரித்துள்ள சூழலில், அமெரிக்கா மேலும் ஒரு முன்னணி போர்க்கப்பலான யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். போர்ட் கப்பலை ஈரானை நோக்கி அனுப்ப ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ முன்னிலையை அதிகரிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.
டிரம்பின் எச்சரிக்கை
இதுகுறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் ஆட்சியை மாற்றும் முயற்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் சூழலில், அந்நாட்டில் ஆட்சி, அதிகார மாற்றம் ஒரு நல்ல விடயமாக இருக்கலாம்” எனக் குறிப்பிட்டார்.
“அவர்கள் 47 ஆண்டுகளாக பேசி கொண்டே இருக்கிறார்கள். எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், அமெரிக்காவுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மிக விரைவில் அமெரிக்காவின் இரண்டாவது போர்க்கப்பலும் ஈரானை நோக்கி புறப்படும்,” எனவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச கவலை
இந்த முன்னேற்றங்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளன. அமெரிக்கா–ஈரான் உறவில் ஏற்பட்டுள்ள இந்த புதிய திருப்பம், உலக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM