இரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியின் கிரியெல்ல, மடல பகுதியில் பெற்றோல் பௌசர் ஒன்று விபத்துக்குள்ளானதில் பெற்றோல் பௌசரில் இருந்த பெற்றோல் களு கங்கையின் நீரில் கலந்துள்ளதால் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணிளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஹொரணை, பண்டாரகம, பாணந்துறை, மொரட்டுவை, பொரலஸ்கமுவ, பிலயாந்தலை ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பௌசரில் இருந்த பெற்றோல், ஆற்று நீரில் கலந்துள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.