"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 780 பேர் கைது!

Published By: Digital Desk 1

14 Feb, 2026 | 04:27 PM
image

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை (13) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 780 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 12 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 773 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், மூவர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 285 கிராம் ஹெரோயின், 648 கிராம் ஐஸ், 06 கிராம் கொக்கெயின், 578 கிராம் கஞ்சா, 2,147 கஞ்சா செடிகள், 90 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,024 போதை மாத்திரைகள், 01 கிலோகிராம் 848 கிராம் 350 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 478 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெஹிவளை மற்றும் மாத்தறையில் போதைப்பொருள் வேட்டை:...

2026-03-13 10:06:44
news-image

பண்டிகைக்கால இணைய மோசடிகள்: பொதுமக்களுக்கு இலங்கை...

2026-03-13 10:04:11
news-image

பஸ் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

2026-03-13 09:40:50
news-image

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக...

2026-03-13 09:46:12
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது! 

2026-03-13 09:37:36
news-image

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-03-13 09:07:46
news-image

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;...

2026-03-13 09:07:21
news-image

பொலிஸ் ஊடகப்பிரிவு பணிப்பாளர் பிரடெரிக் வூட்லருக்கு...

2026-03-13 09:06:38
news-image

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது...

2026-03-13 07:52:47
news-image

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு:...

2026-03-13 07:38:48
news-image

இன்றைய வானிலை

2026-03-13 06:08:35
news-image

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் கடுமையான சட்டங்கள்:...

2026-03-13 06:05:15