பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் ! – அமெரிக்கா, இந்தியா வாழ்த்து

14 Feb, 2026 | 12:20 PM
image

பங்களாதேஷில் நடைபெற்ற 13 ஆவது பொதுத்தேர்தலில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் நாட்டின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பின்னணி

கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் மாணவர் போராட்டங்களின் காரணமாக அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

அதன்பின் சுமார் 18 மாதங்கள் கழித்து புதிய அரசை தேர்ந்தெடுக்க பொதுத்தேர்தல் நடைபெற்றது. இது பங்களாதேஷின் 13வது பொதுத்தேர்தலாகும்.

300 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்கள் கைப்பற்றல்

300 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில், பி.என்.பி கூட்டணிக்கும் அதன் முன்னாள் கூட்டுக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

17 ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்துவந்த தாரிக் ரஹ்மான் அண்மையில் பங்களாஷே் திரும்பியிருந்தார். அவர் முன்னாள் பிரதமர் கலீதா ஷியாவின் மகனாவார்.

அமெரிக்கா வாழ்த்து

பங்களாதேஷில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பி.என்.பி கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில்,

“பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பி.என்.பி கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி உங்கள் தலைமையின் மீது பங்களாதேஷ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. ஜனநாயக ரீதியான மற்றும் முற்போக்கான பங்களாதேஷிற்கு இந்தியாவின் ஆதரவு என்றும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்த புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய அரசியல் மாற்றங்களுக்கு முக்கிய தேர்தல்

ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததையடுத்து நடைபெற்ற இந்தத் தேர்தல், பங்களாதேஷின் அரசியல் எதிர்காலத்தையும் பிராந்திய அரசியல் சமநிலையையும் தீர்மானிக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பி.என்.பி கூட்டணியின் வெற்றி, அந்நாட்டின் அரசியல் நிலைப்பாட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈராக் வான்வெளியில் அமெரிக்க எரிபொருள் நிரப்பு...

2026-03-13 09:58:02
news-image

மேற்காசியாவில் பதற்றம் தீவிரம் : ஹோர்மூஸ்...

2026-03-13 09:10:20
news-image

நேபாளத் தேர்தலில் ரெப் பாடகர் பாலேந்திர...

2026-03-13 09:00:03
news-image

ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக...

2026-03-12 22:10:15
news-image

அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை...

2026-03-13 08:47:25
news-image

உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை...

2026-03-12 16:16:18
news-image

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நவீன 'ஏஐ'...

2026-03-12 16:35:13
news-image

ஆசிய பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி...

2026-03-12 13:57:02
news-image

மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும்...

2026-03-12 14:38:15
news-image

துபாயில் விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன்...

2026-03-12 14:55:36
news-image

டெல்லியில் பயங்கர தீ விபத்து :...

2026-03-12 11:06:01
news-image

போர் நிறுத்தத்திற்கு நிபந்தனைகளை முன்வைத்தார்: ஈரான்...

2026-03-12 11:06:42