தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஓய்வுபெற்ற பொதுமுகாமையாளருக்கு விளக்கமறியல்!

14 Feb, 2026 | 11:04 AM
image

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஓய்வுபெற்ற பொது முகாமையாளரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம்  உத்தரவு  பிறப்பித்துள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவரின் பயன்பாட்டிற்காக ஏற்கனவே  இரண்டு அரச வாகனங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், சட்ட விதிமுறைகளை மீறி மேலதிகமாக வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் விளைவித்ததாக  சந்தேகநபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கண்டி வடக்கு – பாததும்பர ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் ஒப்பந்தத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, 'டொயோட்டா பிராடோ ரக சொகுசு ஜீப் வண்டி ஒன்று வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. 

இவ்வாறு பெறப்பட்ட வாகனம் எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அதற்கான வாடகையாக சுமார் 12,750,000 (12.7 மில்லியன்) ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலுத்தியதன் மூலம் அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வாகனத்தை 'பி.என். ஓட்டோ ஹோல்டிங்' எனும் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக, முறையான கொள்முதல் விதிமுறைகளை மீறிச் செயற்பட்டமை மற்றும் குறித்த நிறுவனத்திற்கு சார்பாக இலாபத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சதி செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. அத்துடன், வாகனத்தை முறையாகப் பொறுப்பேற்காமலேயே அதற்கான கொடுப்பனவுகளைச் செலுத்தி குறிப்பிட்ட நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயற்பட்டமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த ஊழல் மற்றும் சதித்திட்டம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் வியாழக்கிழமை (12) காலை 9.20 மணியளவில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஓய்வுபெற்ற பொது முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.  

இதனையடுத்து ஓய்வுபெற்ற பொது முகாமையாளர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட  நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிவான் உத்தரவிட்டார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி...

2026-03-13 10:32:18
news-image

தெஹிவளை மற்றும் மாத்தறையில் போதைப்பொருட்களுடன் இருவர்...

2026-03-13 10:26:58
news-image

பண்டிகைக்கால இணைய மோசடிகள்: பொதுமக்களுக்கு இலங்கை...

2026-03-13 10:04:11
news-image

பஸ் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

2026-03-13 09:40:50
news-image

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக...

2026-03-13 09:46:12
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது! 

2026-03-13 09:37:36
news-image

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-03-13 09:07:46
news-image

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;...

2026-03-13 09:07:21
news-image

பொலிஸ் ஊடகப்பிரிவு பணிப்பாளர் பிரடெரிக் வூட்லருக்கு...

2026-03-13 09:06:38
news-image

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது...

2026-03-13 07:52:47
news-image

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு:...

2026-03-13 07:38:48
news-image

இன்றைய வானிலை

2026-03-13 06:08:35