தலங்கம துப்பாக்கிச் சூடு ; உயிரிழந்தவர் “ கரந்தெனிய சுத்தா”வின் சட்டத்தரணி?

14 Feb, 2026 | 09:15 AM
image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் வெள்ளிக்கிழமை (13) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் மாலை 05.00 மணியளவில் காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் , ஜீப் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் ஜீப் வாகனத்தில் இருந்த சட்டத்தரணியும் அவரது மனைவியும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர்கள் பிட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு ரி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சட்டத்தரணி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ கரந்தெனிய சுத்தா” என்பவருக்குச் சொந்தமான வழக்குகளை விவாதிக்கும் சட்டத்தரணி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் துப்பாக்கிதாரிகள் ஜீப் வாகனத்தின் மீது 10 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் வலுசக்தி...

2026-03-15 19:54:34
news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52