நாட்டில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு விபத்துகளில் நால்வர் பலி!

Published By: Digital Desk 1

14 Feb, 2026 | 09:39 AM
image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகனவிபத்துக்களில் நேற்று வெள்ளிக்கிழமை நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரணை - பாதுக்கை வீதியில், கனன்வில பகுதியில், இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதுக்கை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியைக் கடக்கும் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பாதசாரி ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி பாதசாரி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கோவின்ன பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - வெல்லவாய வீதியின் படஅத பகுதியில், இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்பு குழாய்கள் ஏற்றப்பட்ட லொரி பின்னோக்கிச் செல்லும்போது, அதே திசையில் வந்த டிப்பர் லொரி பின்னால் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

இந்த விபத்தில் டிப்பர் லொரியின் ஓட்டுநர் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்துடன் தொடர்புடைய லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிகம வாவிப்பகுதியில், பயணித்த டிராக்டர் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது, விபத்தில் காயமடைந்த டிராக்டரின் சாரதி மற்றும் மற்றொருவர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சாரதி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பத்தினிகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அம்பன்பொல பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேகாலை - புலத்கோபிட்டிய வீதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொரொந்தோட்டை நோக்கி அதிவேகமாகச் சென்ற மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தூணில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கேகாலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கேகாலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் அதிக வேகம் மற்றும் கவனக்குறைவான வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெஹிவளை மற்றும் மாத்தறையில் போதைப்பொருள் வேட்டை:...

2026-03-13 10:06:44
news-image

பண்டிகைக்கால இணைய மோசடிகள்: பொதுமக்களுக்கு இலங்கை...

2026-03-13 10:04:11
news-image

பஸ் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

2026-03-13 09:40:50
news-image

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக...

2026-03-13 09:46:12
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது! 

2026-03-13 09:37:36
news-image

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-03-13 09:07:46
news-image

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;...

2026-03-13 09:07:21
news-image

பொலிஸ் ஊடகப்பிரிவு பணிப்பாளர் பிரடெரிக் வூட்லருக்கு...

2026-03-13 09:06:38
news-image

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது...

2026-03-13 07:52:47
news-image

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு:...

2026-03-13 07:38:48
news-image

இன்றைய வானிலை

2026-03-13 06:08:35
news-image

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் கடுமையான சட்டங்கள்:...

2026-03-13 06:05:15