இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நீர் ஆதார உத்தியோகத்தராக 35 வருடங்கள் கடமையாற்றிய ரியர் அத்மிரல் சிசிர ஜயகொடி தனது சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்ற சிசிர ஜயகொடியை கடற்படை தலைமையகத்திலிருந்து  கடற்படை வாகனங்களின் ஊர்வலம் மூலம் சம்பிரதாய பூர்வமாக வழியனுப்பி வைத்தனர்.

இப் பிரியாவிடை நிகழ்வில் சிசிர ஜயகொடியின் 55ஆவது பிறந்த நாளுக்கான வாழ்த்துக்களும் கடற்படை தளபதி ட்ராவிஸ் சின்னையா மற்றும் மூத்த இளைய கடற்படை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டன.

1981ஆம் ஆண்டு ஸ்ரீமன் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2ஆவது நிலை அதிகாரியாக கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ரியர் அத்மிரல் ஜயகொடி கடற்படைக்கு பல சேவைகளை ஆற்றியுள்ளார்.