பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

13 Feb, 2026 | 05:48 PM
image

புத்தளம், தளுவ பகுதியில் இலங்கை கடற்படை 2026 பிப்ரவரி 12 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 86800 பீடிகள், 1250 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், 132 பதப்படுத்தப்பட்ட பீடி இலை பொதிகள், சுமார் 103 கிலோகிராம் நிலக்கரி மற்றும் 1594 ஷாம்பு பாக்கெட்டுகள் மற்றும் சந்தேக நபரை ஒரு லொரியுடன் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னியுடன் இணைக்கப்பட்ட தளுவ கடற்படைப் பிரிவினரால் தளுவ பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொரி ஒன்று சோதனை செய்யப்பட்டது. அப்போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பீடி, பீடி இலைகள், பதப்படுத்தப்பட்ட பீடி இலைகள், நிலக்கரி மற்றும் ஷாம்பு பாக்கெட்டுகள் ஆகியவை லொரியுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர் மன்னாரில் வசிக்கும் 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி, பீடி இலைகள், பதப்படுத்தப்பட்ட பீடி இலைகள், நிலக்கரி, ஷாம்பு பாக்கெட்டுகள் மற்றும் லொரி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு : நான்கு...

2026-03-11 05:54:48
news-image

வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு...

2026-03-11 05:45:00
news-image

உள்நாட்டு நிர்வாகத் தவறுகளை மத்திய கிழக்கு...

2026-03-11 05:43:34
news-image

மத்திய கிழக்கு போர் சூழல்; பாதிப்புக்கள்...

2026-03-11 05:40:18