கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில் வட்டகல விளக்கம்

13 Feb, 2026 | 07:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்துடன் கைது செய்யப்பட்ட கஸ்ஸப்ப தேரருடன் நான் ஒருபோதும் பேசியதில்லை. பொய்யான விடயங்களையே சமூகமயப்படுத்துகிறார். இவரது உள்நோக்கம் ஒருபோதும் வெற்றிப்பெறாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கஸ்ஸப்ப தேரரை நான் கடித தலைப்புடன் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகைத் தருமாறு குறிப்பிட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.இது முற்றிலும் தவறானது.

கஸ்ஸப்ப தேரரை நான் சந்தித்ததும் இல்லை, அவருடன் தொலைபேசியில் பேசவுமில்லை. இவர் என் இவ்வாறு பொய்களை சொல்லி திரிகிறார் என்று தெரியவில்லை.

பொய்களை குறிப்பிட்ட தவறான விடயங்களையே சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார்.இவரது உள்நோக்கம் ஒருபோதும் வெற்றிப்பெறாது.

சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் போது இதுவரை காலமும் அந்த சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் இலாபத்துக்காக அவ்விடத்துக்குச் சென்று சட்டவிரோத செயலுக்கு அனுமதியளிக்குமாறு குறிப்பிடுகிறார்;.

எதிர்க்கட்சித் தலைவர் தவறென்று தெரிந்தும் சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு துணைச் செல்கிறார். அவரது அரசியல் கொள்கை எவ்வாறானது என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு போர் பதற்றம் :...

2026-03-11 09:53:00
news-image

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளுக்கு உதவிய...

2026-03-11 09:44:22
news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு : நான்கு...

2026-03-11 05:54:48
news-image

வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு...

2026-03-11 05:45:00