டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000 கொடுப்பனவு வழங்கப்படாததை எதிர்த்து மூதூரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

13 Feb, 2026 | 05:05 PM
image

டித்வா சூறாவளியால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்தபோதிலும், அந்த கொடுப்பனவும் மூதூர் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் இன்று வெள்ளிக்கிழமை (13)  பிற்பகல் 2 மணியளவில் மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே ரூ. 25,000 கொடுப்பனவு பெற்ற அனைவருக்கும் ரூ. 50,000 வழங்கப்பட தகுதியானவர்கள் என போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர். 

மேலும், சிலருக்கு மட்டுமே ரூ. 50,000 வழங்கப்பட்டுள்ளதாகவும், பல தகுதியானவர்கள் இதுவரை அந்த நிவாரணத் தொகையை பெறவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அண்மையில் நாட்டை தாக்கிய டித்வா சூறாவளி காரணமாக மூதூர் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.  இதனால் பொதுமக்கள் பல்வேறு பொருளாதார இழப்புகளை சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு முறையாக வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளில் சிலருக்கு, மூதூர் பிரதேச செயலக அலுவலகத்தில் பிரதேச செயலாளரை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மூதூர் பிரதேச செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இது தொடர்பாக மீள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தகுதி உடையவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணத் தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சார சபை ஊழியர்களை உடனடியாக பணிக்குத்...

2026-03-11 10:10:16
news-image

கஹத்துடுவ அதிவேக வீதியின் இடைமாறல் பகுதியில்...

2026-03-11 10:05:00
news-image

மத்திய கிழக்கு போர் பதற்றம் :...

2026-03-11 09:53:00
news-image

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளுக்கு உதவிய...

2026-03-11 09:44:22
news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45