நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம் முயற்சி எமது ஆட்சியில் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட்டது - நாமல் ராஜபக்ஷ

13 Feb, 2026 | 07:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடாகும். எமது ஆட்சியில் நீதித்துறை சுயாதீனமாகவே செயற்பட்டது. நீதிமன்றங்கள் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது.  அந்த வாக்குறுதிகள் ஏதும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. மாறாக அரசியல் பழிவாங்கல்களுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

எம்மை சிறைக்கு அனுப்புவதாலோ அல்லது நெருக்கடிக்குள்ளாக்குவதாலோ பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் முடியாது. ஆகவே  மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல 2022 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தற்போது மரண தண்டனை வழங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

அமரகீர்த்தி அதுகோரலவின் மரணத்தை நியாயப்படுத்தும் தரப்பினர் அரசாங்கத்தில் உள்ளார்கள். இது முற்றிலும் தவறானது.அரசியல் கட்டமைப்பின் மீது தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் தான் வெறுப்பை ஏற்படுத்தினார்கள்.அதன் விளைவாகவே முழு நாடும் பற்றி எரிந்தது.

அரசாங்கம் நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த முயற்சிக்கிறது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.எமது ஆட்சியில் நீதிமன்றங்கள் சுயாதீனமாகவே செயற்பட்டது. எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு நீதிமன்றங்கள் ஊடாகவே தீர்வு பெற்றுக்கொள்வோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சார சபை ஊழியர்களை உடனடியாக பணிக்குத்...

2026-03-11 10:10:16
news-image

கஹத்துடுவ அதிவேக வீதியின் இடைமாறல் பகுதியில்...

2026-03-11 10:05:00
news-image

மத்திய கிழக்கு போர் பதற்றம் :...

2026-03-11 09:53:00
news-image

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளுக்கு உதவிய...

2026-03-11 09:44:22
news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45