ஸ்வீட்டி நாட்டி கிரேசி - திரைப்பட விமர்சனம்

13 Feb, 2026 | 04:00 PM
image

ஸ்வீட்டி நாட்டி கிரேசி - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : அருண் விசுவல்ஸ்

நடிகர்கள் : திரிகுன், ஸ்ரீ ஜித்தா கோஷ், இனியா , ராதா, தம்பி ராமையா,  சத்யன், ரவி மரியா, ஆலி , ஜாவா சுந்தரேசன், மதன் பாப் மற்றும் பலர்.

இயக்கம் : ராஜசேகர். ஜி

மதிப்பீடு : 2 / 5

'இனிது இனிது', 'தேனீர் விடுதி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும், தனுஷ் நடிப்பில் வெளியான 'தங்க மகன்' படத்தின் மூலம் பிரபலமான தெலுங்கு நடிகர் திரிகுன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி ' திரைப்படம் - ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை அளித்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் சீனியர் மாணவரான சிவா( திரி குன்) வும், ஜூனியரான அனிதா( ஸ்ரீ ஜித்தா கோஷ்)வும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். கட்டிலில் காதலை காமத்துடன் வளர்க்கிறார்கள். அந்த தருணத்தில் சிவா, அனிதாவிடம் நான் ஏற்கனவே எம்மை விட வயதில் மூத்த இரண்டு பெண்மணிகளுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறேன் என சொல்கிறார்.

இதைக் கேட்ட அனிதா அதிர்ச்சி அடைந்தாலும்.. பிறகு தன் தோழிகளின் அறிவுரையால் சிவாவை திருமணம் செய்து கொண்டு,  தன் வீட்டிற்கு செல்கிறார். அங்கு சென்றவுடன் சிவா அதிர்ச்சி அடைகிறார். அவருடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு வயதில் மூத்த பெண்மணிகள் அங்கு இருக்க...! அடுத்து என்ன நடந்தது ? என்பதுதான் படத்தின் கிளுகிளுப்பான கதை.

வயது வந்தோருக்கான நகைச்சுவையுடன் கூடிய படைப்பு வகைமையில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் காட்சிகள் மட்டும் அல்லாமல்... காட்சிகளுக்கான கதாபாத்திர வடிவமைப்பிலும் மித மிஞ்சிய காமம் இருப்பது பலம் மற்றும் பலவீனம்.

பட மாளிகைக்கு வருகை தந்திருக்கும் பார்வையாளர்களை உற்சாகமாக வைத்திருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் நிறுத்தி.. இயக்குநர் காட்சிகளை உருவாக்கி நகர்த்துவதால் ஒரு பிரிவினரால் கிளுகிளுப்புடன் ரசிக்க முடிகிறது.

கவர்ச்சிக்கும் , ஆபாசத்திற்கும் இடையேயான மெல்லிய கோட்டில் இயக்குநர் சாமர்த்தியமாக கதையை சொல்லி இருந்தாலும்.. இயக்குநரின் இந்த துல்லியமான அடல்ட் கொமடியை கதையின் நாயகனான திரி குன் உள்வாங்கி, அற்புதமான உடல் மொழியால் திரையில் மாயஜாலம் நிகழ்த்தி ரசிகர்களை கவர்கிறார்.

அனிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகை ஸ்ரீ ஜித்தா கோஷ் - தன் இளமை முழுவதையும் திரையில் காண்பித்து, ரசிகர்களை கவர்ச்சியால் மிரட்டுகிறார்.

நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இனியா - கதாபாத்திரம் கோரும் காம உணர்வை ஒளிப்பதிவாளர் மற்றும் ஆடை வடிவமைப்பாளருடன் இணைந்து அளவாகவும், அழகாகவும்  திரையில் காண்பித்து ரசிகர்களை வசீகரிக்கிறார்.

ஷைலு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை 'சுந்தரா ட்ராவல்ஸ்' ராதா தன் பங்கிற்கு திரையில் கச்சிதமாக தோன்றி ரசிகர்களை மயக்குகிறார்.

இவர்களைக் கடந்து ஷார்ப் சம்பத் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவி மரியா, அழகேசன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா ஆகியோர்களும் சில இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பட மாளிகை ரசிகர்களுக்கு இதமாக உள்ளது. படத்தின் தொடக்கத்தில் சில காட்சிகளில் உரையாடலும், பின்னணி இசையும் இரண்டற கலப்பதால்... காட்சிகளை ரசிக்கவோ.. புரிந்து கொள்ளவோ.. முடியவில்லை.

இரட்டை அர்த்த வசனங்கள்- மசாலா நெடி தூக்கலான காட்சிகள் என முழுக்க முழுக்க கொமர்சல் கொமடி கலாட்டா காம்போவாக உருவாகி இருப்பதால்..  பொருந்தா காமத்தை விரும்பும் ரசிகர்களில் ஒரு பிரிவினர் இதனை கொண்டாடுவார்கள்.

ஸ்வீட்டி நாட்டி கிரேசி - லெக் பீஸ் பிரியாணி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீண்டும் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பளிக்கும் சிவகார்த்திகேயன்

2026-03-12 17:30:38
news-image

ஜெய் நடிக்கும் 'சட்டென்று மாறுது வானிலை'...

2026-03-12 16:37:11
news-image

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ஹேப்பி...

2026-03-11 14:51:50
news-image

முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய...

2026-03-11 14:47:53
news-image

நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் புதிய...

2026-03-11 14:38:41
news-image

ஹாரர் படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது...

2026-03-10 14:35:51
news-image

'தலைவாசல்' விஜய் நடிக்கும் 'ஆர் ஆர்...

2026-03-10 14:27:59
news-image

மம்முட்டி- மோகன்லால் நடிக்கும் 'பேட்ரியாட் '...

2026-03-09 16:17:33
news-image

காதல் ரீசெட் ரிப்பீட் - திரைப்பட...

2026-03-09 16:14:25
news-image

வரவேற்பை பெற்று வரும் கென் கருணாஸின்...

2026-03-09 16:09:30
news-image

ஏப்ரலில் வெளியாகும் பரத்- அஜய் கார்த்தி...

2026-03-09 16:01:51
news-image

பெண்மணிகளின் வலிமையையும் , பொறுமையையும் உரக்கப்...

2026-03-09 15:42:22